Saturday 1 November 2014

திருந்துமா ததஜ? - பகுதி-3


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காட்டித் தந்து, முஃமின்கள் பின்பற்றிய நேர்வழியைப் புறந்தள்ளிவிட்டு, புதியதொரு வழியைத் தேர்ந்துகொள்பவனை அவன் வழியிலேயே விட்டுவிடுவதாக அல்லாஹ் கூறுகிறான்:

وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءتْ مَصِيرًا  

4:115 எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்; அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்.


சகோ. அர்ஹம் அவர்கள் எடுத்துச் சொல்லும் மேற்காணும் இறை வசன விளக்கத்தை வழக்கம்போல் வெட்டித் திருகுதாளம் செய்து முகநூலில் பதிந்துவிட்டு, "வெற்றி", "வெற்றி" என்று ததஜவினர் பிதற்றுகின்றனர், இதோ அதன் முழுமையான காணொளி:

நேர்வழி சென்ற முஃமின்களுள் முதன்மையானவர்களான நபித்தோழர்களுக்கு மத்தியில் சிறு, சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தன என்பது எல்லாருக்கும் தெரிந்த உண்மை. அதைப் பிடித்துக்கொண்டு, நபித் தோழர்கள் அனைவரும் வழிகேட்டில் இருந்தனர் எனும் மாயையை உருவாக்குவதும் நபிவழியைப் பின்பற்றுவதற்காகத் தம் வாழ்க்கையை அர்ப்பணித்த மொத்த நபித் தோழர்களையும் சரியானவற்றில் பின்பற்றுவது ஷிர்க் என்றும் வழிகேடு என்றும் எதன் அடிப்படையில் கூறுகின்றீர்கள்? எனும் கேள்விக்கு, ததஜவிடம் பதிலில்லை.

இரு தரப்பினரும் விவாதித்தவை கொஞ்சமும் குறைக்கப்படாமல் மொத்தமாக இன்ஷா அல்லாஹ் இங்குப் பதிக்கப்படும்.

தொடரும், (இன்ஷா அல்லாஹ்).

2 comments:

  1. அட ! மிக்ஸர் பார்ட்டிங்களா....!

    இப்படிச் செய்யத் துணிந்தவர்கள் ஏன் விவாதத்தில் கலந்து கொண்ட த த ஜ தரப்பு நியாமான பதிலையும் காரணத்தையும் அந்த மிக்ஸர் பார்ட்டிங்க இன்னும் வெளியிட வில்லை !?

    இன்னும் வீடியோ மிக்ஸர் அரைத்துக் கொண்டிருக்கிறதா ? அல்லது எங்கெல்லாம் 'கத்தி கூச்சல்' போட்டதை பொத்தி பொத்தி வைக்க முற்படுகிறதா ?

    ReplyDelete