Tuesday 24 January 2023

காட்டுப்பள்ளிக் கந்தூரி ஊர்வலத்தில் விதி மீறல்கள்

பெறுநர் :                                                                                                             நாள் : 24.1.2023

திரு. ஆய்வாளர் அவர்கள்,

நகரக் காவல் நிலையம்,

அதிராம்பட்டினம் நகராட்சி.

 

நகல்கள்:

1.     மாவட்ட ஆட்சியர் அவர்கள், தஞ்சாவூர்

collrtnj@nic.in, collrtnj@tn.nic.in, (மின்னஞ்சல் வழியாக)

2.     வட்டாட்சியர் அவர்கள், பட்டுக்கோட்டை

tahpkt.tntnj@nic.in (மின்னஞ்சல் வழியாக)

 

பொருள்: காட்டுப்பள்ளிக் கந்தூரியில் நடைற்ற விதி மீறல்கள்

 

மரியாதைக்குரிய ஐயா,

பட்டுக்கோட்டை வட்ட அலுவலகத்தில் கடந்த 22.1.2023 அன்று நடைபெற்ற ‘அமைதிப் பேச்சுவார்த்தை கூட்ட நடவடிக்கை’ (ப.வெ.03/2022/அ7) குறிப்புகளின்படி, காட்டுப்பள்ளிக் கந்தூரி விழாக் குழுவினரும் எதிர்த் தரப்பினரும் ஏற்றுக்கொண்டு, கையெழுத்திட்டு எடுக்கப்பட்ட முடிவுகளில் பெரும்பாலானவை விழாக்குழுவினரால் மீறப்பட்டுள்ளன. அவையாவன :

1.     விதி எண் ஒன்றில் குறிப்பிட்டபடி மாலை 4 மணிக்கு ஊர்வலம் தொடங்கப்படவுமில்லை, மாலை 7 மணிக்கு முடிவுறவுமில்லை. மாறாக, இரவு மணி 8.45 வரை ஊர்வலம் தொடர்ந்தது.

2.     தடை செய்யப்பட்ட மேலத்தெருவையும் தாண்டி, தொக்காலிக்காடு செல்லும் மேற்குத் திசை சாலையிலும் ஊர்வலம் சென்றது.

3.     ஊர்வலத்தை விழாக் குழுவினர் முன்னெடுத்துச் செல்லவில்லை.

4.     உருப்படிகள் எண்ணிக்கை, காவல்துறையினரின் காணொளிப் பதிவுகளில்.

5.     பள்ளிவாசல்களுக்கு 100 மீட்டர் முன்னும் பின்னும் இசைக்குழுவினர் நிறுத்தவில்லை.

6.     ஊர்வலம் முழுதும் ஆட்டம்-பாட்டம் அலப்பறைகள் ஓயவில்லை.

 

“மேற்காணும் நிபந்தனைகள் மீறப்பட்டதாகத் தெரியவந்தால், காவல்துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்ற வட்டாட்சியரின் உறுதியான எச்சரிக்கைகளுக்கு ஏற்ப கந்தூரி விழாக் குழுவினருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

பின் குறிப்பு : வட்டாட்சியரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப, கந்தூரியின் மற்ற நாட்களில் இடம்பெறும் சமூக விரோதச் செயல்களையும் காவல்துறையினரின் கவனத்துக்குக் கொண்டுவருவோம்.

 

நன்றி!

இப்படிக்கு,

                                                                                                                ஜமீல் M ஸாலிஹ்

                                                                                                     செயலாளர் – 9043727525


வட்டாட்சியரின் அழைப்பு