Saturday 22 November 2014

திருந்துமா ததஜ? பகுதி - 7 (பொய்யன் செய்யது இபுராஹீம்)


த.த.ஜ வை சேர்ந்த செய்யது இப்ராஹீம் என்பவனின் உளறலும் உண்மை நிலையும்

அதிராம்பட்டினத்தில் த த ஜ வுக்கும் அதிரை தாருத் தவ்ஹீதுக்கும் இடையே நடந்த விவாதத்தின் போது உணர்வு பத்திரிக்கையில் அதன் ஆசிரியராக இருந்த ஒருவர் செய்த செய்தி மோசடி குறித்து நான் முன்பு குறிப்பிட்டதை அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினர் சுட்டிக்காட்டியபோது அதை பொய் என்று நிரூபிக்க திராணியற்ற செய்யது இப்ராஹீம் என்பவன் தேவையில்லாமல் என் மீதும் என் மனைவி மீதும் களங்கம் கற்பித்து பேசியிருக்கிறான். பொதுவாகவே இவன் போதையில் உளறுவான் என்று மக்கள் சொல்லுவார்கள். அதை மீண்டும் நிரூபித்திருக்கிறான்.

அடுத்தவன் மனைவியுடன் நான் வாழ்வதாகவும் அதை நான் ஒப்புக்கொண்டு மினிட் புத்தகத்தில் கையெழுத்து போட்டதாகவும் அதனால்தான் என்னை நீக்கியதாகவும் போதையில் உளறி கொட்டியிருக்கிறான். ஒரு மனிதனை தக்லீத் செய்த வழிகெட்ட மார்க்கத்திலுள்ள இவன் உணர்வு பத்திரிகை செய்தி குறித்து நான் சொன்னதை அதிரை தாருத் தவ்ஹீத் ஜமாத்தினர் விசாரிக்காமல் அப்படியே வாந்தி எடுப்பதாக சொல்கின்ற இவன்தான் நடந்த உண்மை என்னவென்று நன்றாக தெரிந்திருந்தும் என் மீது கொண்ட விரோதம் காரணமாக காரைக்கால் மாவட்ட நிர்வாகிகள் சொன்னதை அப்படியே வாந்தி எடுத்திருக்கிறான்.

நடந்த உண்மை என்னவென்றால், நான் இரண்டாவது திருமணம் செய்ய முடிவெடுத்து இவர்களை அணுகியபோது இவர்கள் சொன்ன பதில், "நம் ஜமாத்தில் நிர்வாகிகளாகவும், தாயிகளாகவும் உள்ளவர்கள் இரண்டாவது திருமணம் செய்ய அனுமதி இல்லை. அப்படி செய்தால் பெண்கள் மத்தியில் ஜமாஅத் இமேஜ் பாதிக்கப்படுகிறது" என்றார்கள். "மார்க்கம் அப்படி சொல்கிறதா?" என்று நான் கேட்டபோது, "மார்க்கம் அப்படி சொல்லவில்லை நம் ஜமாத்தின் எழுதப்படாத பைலா அப்படி சொல்கிறது" என்றார்கள். "மாநில பேச்சாளர்கள் சிலர் இரண்டு திருமணம் செய்திருக்கிறார்களே" என்று நான் கேட்டபோது, "பாக்கர் நிகழ்வுக்கு முன் பாக்கர் நிகழ்வுக்கு பின் என்று நாங்கள் வைத்திருக்கிறோம்" என்று சொன்னவனே இந்த செய்யது இப்ராஹிம்தான். 


"அப்படியானால் இதை எழுத்துப்பூர்வமாக எனக்கு தாருங்கள் நான் வேறு ஜமாஅத் மூலமாக திருமணம் செய்துக் கொள்கிறேன்" என்று சொன்னவுடன் இரண்டு நாள் அவகாசம் கேட்டார்கள். இரண்டு நாளைக்கு பிறகு கானாத்தூர் பஷீர் அவர்கள் என்னை தொடர்புகொண்டு, "நீங்கள் தலைமைக்கு வாருங்கள் திருமணம் செய்து வைக்கிறோம். ஆனால் மாவட்ட மற்றும் தாயி பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாக எழுதி தரவேண்டும்" என்று நிபந்தனை விதித்து, "இதை மாவட்ட நிர்வாகிகளிடம் ஒப்புதல் கடிதம் வாங்கி வர வேண்டும்" என்றார். "மற்ற மாவட்ட நிர்வாகிகளுக்கும் எனக்கும் இரண்டு வருடங்களாக அவர்கள் என் மீது கொண்ட தனிப்பட்ட விரோதங்களினாலும், காழ்ப்புணர்சசிகளாலும் உள்ளூரில் பயான் செய்வது சம்பந்தமாக பிரச்சனைகள் இருந்ததால் அவர்களிடம் வாங்கி வர முடியாது" என்று சொல்லிவிட்டேன். பிறகு அவர் "பரவாயில்லை இங்கே தலைமையில் வந்து எழுதிக்கொடுங்கள்" என்று சொன்னார். பிறகு மாநில தலைமைக்கு சென்று அங்கு அவர்கள் தஃப்தரில்தான் திருமணம் செய்து வைத்தார்கள். இதுதான் நடந்த உண்மை.

அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு சொல்கிறேன். இந்த சம்பவங்கள், பேச்சு வார்த்தைகள் அனைத்தும், செய்யது இப்ராஹிமுக்கும், கோவை ரஹ்மத்துல்லாஹ்வுக்கும், கானாத்தூர் பஷீர் அவர்களுக்கும் நன்றாகவே தெரியும்.
 

தங்கள் இயக்கத்தை வளர்ப்பதற்காக மார்க்கத்தை பலி கொடுக்கிறார்கள் என்ற உண்மை தெரிந்த பிறகுதான் அந்த இயக்கத்திலிருந்து வெளியேற வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது.
 

இப்போது என்மீது அவதூறையும் களங்கத்தையும் வேண்டுமென்றே சுமத்துவதற்கு என்ன காரணம் என்பதையும் மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
 

காரைக்கால் மாவட்ட நிர்வாகிகளாக இருந்தவர்களின் மார்க்க விரோத போக்கை நான் தொடர்ந்து சுட்டிக்காட்டி இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று தலைமைக்கு கடிதம் போட்டேன். இது குறித்து விசாரிப்பதற்காக வந்தவர்கள், நான் யார் மீது பிரதானமாக குற்றம் சுமத்தினேனோ அவர் வீட்டிலேயே இரவு தங்கி, அறுசுவை உணவு உண்டு அவருடனேயே பஞ்சாயத்துக்கு வருகிறார்கள். மசூரா ஆரமபித்த உடனேயே நான் கேட்டேன், குற்றம் சுமத்தப்பட்டவருடன் அளவளாவிக்கொண்டு வருகிறீர்களே உங்களிடம் எனக்கு எப்படி நியாயம் கிடைக்கும் என்று கேட்டேன். இதுதான் நான் செய்த தவறு உடனே அவர்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்து விட்டது. உடனே அங்கிருந்த ஒருவர் வெளியே சென்று யாருடனோ செல்போனில் பேசிவிட்டு வந்து என்மீது அபாண்டமாக குற்றட்சாட்டுகளை சுமத்த ஆரம்பித்து விட்டார்.
 

நான் மாவட்ட நிர்வாகத்தை புறக்கணித்துச் சென்றதால் ஒட்டு மொத்த நிர்வாகிகளும் ( சுல்தான் மாமா தவிர ) எனக்கு எதிராக திரண்டு தலைமையை எனக்கு எதிராக நெருக்கினார்கள். என்னை அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்க வேண்டும். வெளியூருக்கும் பயானுக்கு அனுப்பக்கூடாது மீறி அனுப்பினால் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் ராஜினாமா செய்து காரைக்காலில் ஜமாத்தை கலைத்து விடுவோம் என்று தலைமைக்கு கடிதம் அனுப்பினார்கள்.
என் மீது விரோதம் கொண்ட காரைக்கால் மாவட்ட நிர்வாகிகளின் மிரட்டலுக்கு பணிந்து என் மீது நடவடிக்கை எடுக்க இவர்கள் தேடி கண்டுபிடித்த காரணம்தான் என் மீது இவர்கள் சொல்லும் அவதூறுகள். இது இவர்களின் வழக்கமான பாணிதான் என்பதை மக்கள் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள்.
 

இன்றைக்கும் காரைக்கால் ததஜாவில் என் மீது நன் மதிப்பும், நட்பும் கொண்ட பல சகோதரர்கள் இருக்கிறார்கள். ஆனால் Mopink sadik என்ற காரைக்காலில் விலாசம் இல்லாத ஒரு ஆள்தான் என்னை பற்றி முகநூலில் தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகிறான். என் மீது அவதூறுகளை அள்ளித் தெளிப்பதற்கு முன் இவன் சார்ந்த தற்போதைய மற்றும் முன்னாள் மாவட்ட நிர்வாகிகளின் ஒழுக்க யோக்கியதைகள் என்ன என்பதெல்லாம் இவனுக்கு தெரியவில்லை என்றால் விசாரித்து தெரிந்துக் கொள்ளட்டும். ஒருவன் எவ்வளவு அயோக்கியமானவனாக இருந்தாலும் தங்களுடன் இருக்கும் வரை, அல்லது அவனது அயோக்கியத்தனம் வெளிச்சத்திற்கு வரும்வரை அவனை நல்லவன் என்று சொல்வது, இவர்களுடைய செயல்பாட்டில் வேறுபட்டு வெளியேறினால் அவன் மீது பாலியல் குற்றச்சாட்டு அல்லது பொருளாதார குற்றச்சாட்டு சுமத்துவது அதற்காக ஜமாத் மூலமாக பொருளாதார அல்லது கிரைண்டர், தையல் மெஷின் என்று கொடுத்து சாட்சிகளை செட்டப் செய்வது இதுதான் இவர்களின் கேடுகெட்ட நடைமுறை என்பதை இப்பொழுது மக்கள் நன்றாகவே தெரிந்துக் கொண்டு விட்டார்கள். நாங்கள்தான் உத்தமர்கள் என்று சொல்லிக்கொண்டு இவர்கள் செய்யும் இந்த கேடுகெட்ட செயலைப் பார்த்து மக்கள் இவர்களை காறித்துப்ப ஆரம்பித்து விட்டார்கள். இனியாவது அல்லாஹ்வையும், மறுமையையும் அஞ்சி இவர் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்.




No comments:

Post a Comment