Monday 10 November 2014

அதிரை தாருத் தவ்ஹீத் vs ததஜ விவாதம் - 27.10.14 முதல் அமர்வு

கொள்கையற்றவர்கள் யார்?


அதிரை தாருத் தவ்ஹீத் vs ததஜ விவாதம் - 27.10.2014 முதல் அமர்வு - உரை-5 நேரம்: 12:30-13:00

ததஜ அதிரைக் கிளையின் இணைய தளம், மஞ்சள் பத்திரிகை போல் செய்திகளை வெளியிடுகிறது எனும் குற்றச்சாட்டுக்கு உவமையாக 'இந்துநேசன்' இதழைப் பற்றிக் குறிப்பிட்டதை, ததஜவின் மேலாண்மை எடுத்துக் கொடுத்து ததஜ மா.து.த. "கற்பனை" என்று உளறுகிறார். "நம்முடைய பிறப்புக்கு முன்னர் உலகமே இயங்கவில்லை" என்பது போன்ற மாயையில் உழல்பவர்கள், கூகுளில் "இந்துநேசன்" அல்லது "சினிமாதூது" அல்லது "லட்சுமிகாந்தன் கொலை வ்ழக்கு" என்று தேடிப்பார்த்து, அதிரை தாருத் தவ்ஹீத் சார்பில் கூறிய ததஜ அதிரை தளத்துக்கு இந்துநேசன் உவமானமும் குற்றச்ச்ட்டும் கற்பனையா உண்மையா எனத் தெரிந்து கொள்ளட்டும்.

"கடிதம் கொடுத்து ஃபேமஸ் ஆகப் பார்க்கிறார்கள்" என்ற ததஜ மா.து.த.வின் குற்றச்சாட்டுக்கு பதிலாக யார் மூலம் யார் ஃபேமஸ் ஆனார்கள் என்பதற்குக் கருப்பு வெள்ளை க்ளிப் போடப்பட்டது.

இதை எதுக்குப் போட்டாங்கன்னு விளங்கவில்லையாம். இவிங்கள்லாம் எதுக்கு விவாதம் செய்ய வரணும்?

சூனிய மாவு அரைக்க வந்த் நாசர், "84இல் ப்பீஜே சொன்னதை ஏற்றுக்கொண்டவர்கள் இப்போது அதே ப்பீஜே சொல்வதை ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன்?" என்ற அடிமுட்டாள்தனமான கேள்வியைக் கேட்கிறார்.


திருபுவனத்தில் நடந்த பயிற்சி முகாமிலும் அதற்குப் பிறகும் சூனியத்துக்கு விளக்கமாகக் குர்ஆன் வசனத்துக்கு ஸஹீஹான ஹதீஸை இணைத்துக் கூறியதால் ஏற்றுக்கொண்டோம்; இப்போது ஹதீஸ்களை மறுத்துத் தன் சுயவிளக்கத்தைக் கூறுவதால் ஏற்க மறுக்கிறோம் என்று விளக்கியும் புரிய முடியாமல் தவிக்கும் இவர்கள் விவாதம் செய்ய வந்ததேன்?

1 comment:

  1. மா.து.த.வின் பட படப்பே படம்போட்டுக் காட்டியதே.... இவங்க (ADT)கிட்டே வந்து மாட்டிகிட்டோமேன்னு....!

    அரைவேக்காடு செ.இ.வுக்கு இருக்கு அண்ணனின் பார்வை...!

    தரங்கெட்டவர்களின் வார்த்தை பிரயோகம் கொஞ்சநஞ்சமிருந்த பிடிப்பும் அத்துப் போய்விட்டது.

    அந்த இயக்க மயக்கத்திலிருக்கும் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நன்கறிந்த இவர்கள் மீது பச்சாபதம்தான் ஏற்படுகிறது...

    ReplyDelete