Saturday, 29 November 2014

திருந்துமா ததஜ? பகுதி - 10 (அண்ணனை முஷ்ரிக் ஆக்கிய ததஜ தம்பி அப்துல் நாசர்)

 ...
فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ وَمَا هُم بِضَآرِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلاَّ بِإِذْنِ اللّهِ  ... -سورة البقرة 102

"... கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவதையே அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அல்லாஹ்வின் விருப்பமின்றி யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது ..."

அல் பகரா 102 - பீஜே தமிழாக்கம், ஏப்ரல் 2003.


"... கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவதையும் அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அல்லாஹ்வின் விருப்பமின்றி அதன் மூலம் யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது ..."

அல் பகரா 102 - பீஜே தமிழாக்கம், ஜனவரி 2014.

திருந்துமா ததஜ? பகுதி - 9 (சூனியம் என்றால் அவதூறாம்)

புகாரி பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6857

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்:
நபி(ஸல்) அவர்கள், "பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்துவிடுங்கள்" என்று கூறினார்கள். மக்கள், "இறைத்தூதர் அவர்களே! அவை யாவை?" என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 
"அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, 
சூனியம் செய்வது, 
முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, 
வட்டியைப் புசிப்பது, 
அநாதைகளின் செல்வத்தை உண்பது, 
போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது, 
இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்களின் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும்பாவங்கள்)" என்று கூறினார்கள்.

சூனியம் என்பது, 1பொய், 2பித்தலாட்டம், 3கண்கட்டு வித்தை, 4ஏமாற்று, 5போலித் தோற்றம் என்றெல்லாம் ததஜவினர் விளக்கம் சொல்லிப் பார்த்தார்கள்.

சூனியத்துக்கு ததஜவின் அப்துல் ரஹீம் புதிதாகக் கண்டுபிடித்த விளக்கம் 'அவதூறு'

Saturday, 22 November 2014

திருந்துமா ததஜ? பகுதி - 7 (பொய்யன் செய்யது இபுராஹீம்)


த.த.ஜ வை சேர்ந்த செய்யது இப்ராஹீம் என்பவனின் உளறலும் உண்மை நிலையும்

அதிராம்பட்டினத்தில் த த ஜ வுக்கும் அதிரை தாருத் தவ்ஹீதுக்கும் இடையே நடந்த விவாதத்தின் போது உணர்வு பத்திரிக்கையில் அதன் ஆசிரியராக இருந்த ஒருவர் செய்த செய்தி மோசடி குறித்து நான் முன்பு குறிப்பிட்டதை அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினர் சுட்டிக்காட்டியபோது அதை பொய் என்று நிரூபிக்க திராணியற்ற செய்யது இப்ராஹீம் என்பவன் தேவையில்லாமல் என் மீதும் என் மனைவி மீதும் களங்கம் கற்பித்து பேசியிருக்கிறான். பொதுவாகவே இவன் போதையில் உளறுவான் என்று மக்கள் சொல்லுவார்கள். அதை மீண்டும் நிரூபித்திருக்கிறான்.

அடுத்தவன் மனைவியுடன் நான் வாழ்வதாகவும் அதை நான் ஒப்புக்கொண்டு மினிட் புத்தகத்தில் கையெழுத்து போட்டதாகவும் அதனால்தான் என்னை நீக்கியதாகவும் போதையில் உளறி கொட்டியிருக்கிறான். ஒரு மனிதனை தக்லீத் செய்த வழிகெட்ட மார்க்கத்திலுள்ள இவன் உணர்வு பத்திரிகை செய்தி குறித்து நான் சொன்னதை அதிரை தாருத் தவ்ஹீத் ஜமாத்தினர் விசாரிக்காமல் அப்படியே வாந்தி எடுப்பதாக சொல்கின்ற இவன்தான் நடந்த உண்மை என்னவென்று நன்றாக தெரிந்திருந்தும் என் மீது கொண்ட விரோதம் காரணமாக காரைக்கால் மாவட்ட நிர்வாகிகள் சொன்னதை அப்படியே வாந்தி எடுத்திருக்கிறான்.

நடந்த உண்மை என்னவென்றால், நான் இரண்டாவது திருமணம் செய்ய முடிவெடுத்து இவர்களை அணுகியபோது இவர்கள் சொன்ன பதில், "நம் ஜமாத்தில் நிர்வாகிகளாகவும், தாயிகளாகவும் உள்ளவர்கள் இரண்டாவது திருமணம் செய்ய அனுமதி இல்லை. அப்படி செய்தால் பெண்கள் மத்தியில் ஜமாஅத் இமேஜ் பாதிக்கப்படுகிறது" என்றார்கள். "மார்க்கம் அப்படி சொல்கிறதா?" என்று நான் கேட்டபோது, "மார்க்கம் அப்படி சொல்லவில்லை நம் ஜமாத்தின் எழுதப்படாத பைலா அப்படி சொல்கிறது" என்றார்கள். "மாநில பேச்சாளர்கள் சிலர் இரண்டு திருமணம் செய்திருக்கிறார்களே" என்று நான் கேட்டபோது, "பாக்கர் நிகழ்வுக்கு முன் பாக்கர் நிகழ்வுக்கு பின் என்று நாங்கள் வைத்திருக்கிறோம்" என்று சொன்னவனே இந்த செய்யது இப்ராஹிம்தான். 


"அப்படியானால் இதை எழுத்துப்பூர்வமாக எனக்கு தாருங்கள் நான் வேறு ஜமாஅத் மூலமாக திருமணம் செய்துக் கொள்கிறேன்" என்று சொன்னவுடன் இரண்டு நாள் அவகாசம் கேட்டார்கள். இரண்டு நாளைக்கு பிறகு கானாத்தூர் பஷீர் அவர்கள் என்னை தொடர்புகொண்டு, "நீங்கள் தலைமைக்கு வாருங்கள் திருமணம் செய்து வைக்கிறோம். ஆனால் மாவட்ட மற்றும் தாயி பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாக எழுதி தரவேண்டும்" என்று நிபந்தனை விதித்து, "இதை மாவட்ட நிர்வாகிகளிடம் ஒப்புதல் கடிதம் வாங்கி வர வேண்டும்" என்றார். "மற்ற மாவட்ட நிர்வாகிகளுக்கும் எனக்கும் இரண்டு வருடங்களாக அவர்கள் என் மீது கொண்ட தனிப்பட்ட விரோதங்களினாலும், காழ்ப்புணர்சசிகளாலும் உள்ளூரில் பயான் செய்வது சம்பந்தமாக பிரச்சனைகள் இருந்ததால் அவர்களிடம் வாங்கி வர முடியாது" என்று சொல்லிவிட்டேன். பிறகு அவர் "பரவாயில்லை இங்கே தலைமையில் வந்து எழுதிக்கொடுங்கள்" என்று சொன்னார். பிறகு மாநில தலைமைக்கு சென்று அங்கு அவர்கள் தஃப்தரில்தான் திருமணம் செய்து வைத்தார்கள். இதுதான் நடந்த உண்மை.

அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு சொல்கிறேன். இந்த சம்பவங்கள், பேச்சு வார்த்தைகள் அனைத்தும், செய்யது இப்ராஹிமுக்கும், கோவை ரஹ்மத்துல்லாஹ்வுக்கும், கானாத்தூர் பஷீர் அவர்களுக்கும் நன்றாகவே தெரியும்.
 

தங்கள் இயக்கத்தை வளர்ப்பதற்காக மார்க்கத்தை பலி கொடுக்கிறார்கள் என்ற உண்மை தெரிந்த பிறகுதான் அந்த இயக்கத்திலிருந்து வெளியேற வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது.
 

இப்போது என்மீது அவதூறையும் களங்கத்தையும் வேண்டுமென்றே சுமத்துவதற்கு என்ன காரணம் என்பதையும் மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
 

காரைக்கால் மாவட்ட நிர்வாகிகளாக இருந்தவர்களின் மார்க்க விரோத போக்கை நான் தொடர்ந்து சுட்டிக்காட்டி இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று தலைமைக்கு கடிதம் போட்டேன். இது குறித்து விசாரிப்பதற்காக வந்தவர்கள், நான் யார் மீது பிரதானமாக குற்றம் சுமத்தினேனோ அவர் வீட்டிலேயே இரவு தங்கி, அறுசுவை உணவு உண்டு அவருடனேயே பஞ்சாயத்துக்கு வருகிறார்கள். மசூரா ஆரமபித்த உடனேயே நான் கேட்டேன், குற்றம் சுமத்தப்பட்டவருடன் அளவளாவிக்கொண்டு வருகிறீர்களே உங்களிடம் எனக்கு எப்படி நியாயம் கிடைக்கும் என்று கேட்டேன். இதுதான் நான் செய்த தவறு உடனே அவர்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்து விட்டது. உடனே அங்கிருந்த ஒருவர் வெளியே சென்று யாருடனோ செல்போனில் பேசிவிட்டு வந்து என்மீது அபாண்டமாக குற்றட்சாட்டுகளை சுமத்த ஆரம்பித்து விட்டார்.
 

நான் மாவட்ட நிர்வாகத்தை புறக்கணித்துச் சென்றதால் ஒட்டு மொத்த நிர்வாகிகளும் ( சுல்தான் மாமா தவிர ) எனக்கு எதிராக திரண்டு தலைமையை எனக்கு எதிராக நெருக்கினார்கள். என்னை அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்க வேண்டும். வெளியூருக்கும் பயானுக்கு அனுப்பக்கூடாது மீறி அனுப்பினால் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் ராஜினாமா செய்து காரைக்காலில் ஜமாத்தை கலைத்து விடுவோம் என்று தலைமைக்கு கடிதம் அனுப்பினார்கள்.
என் மீது விரோதம் கொண்ட காரைக்கால் மாவட்ட நிர்வாகிகளின் மிரட்டலுக்கு பணிந்து என் மீது நடவடிக்கை எடுக்க இவர்கள் தேடி கண்டுபிடித்த காரணம்தான் என் மீது இவர்கள் சொல்லும் அவதூறுகள். இது இவர்களின் வழக்கமான பாணிதான் என்பதை மக்கள் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள்.
 

இன்றைக்கும் காரைக்கால் ததஜாவில் என் மீது நன் மதிப்பும், நட்பும் கொண்ட பல சகோதரர்கள் இருக்கிறார்கள். ஆனால் Mopink sadik என்ற காரைக்காலில் விலாசம் இல்லாத ஒரு ஆள்தான் என்னை பற்றி முகநூலில் தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகிறான். என் மீது அவதூறுகளை அள்ளித் தெளிப்பதற்கு முன் இவன் சார்ந்த தற்போதைய மற்றும் முன்னாள் மாவட்ட நிர்வாகிகளின் ஒழுக்க யோக்கியதைகள் என்ன என்பதெல்லாம் இவனுக்கு தெரியவில்லை என்றால் விசாரித்து தெரிந்துக் கொள்ளட்டும். ஒருவன் எவ்வளவு அயோக்கியமானவனாக இருந்தாலும் தங்களுடன் இருக்கும் வரை, அல்லது அவனது அயோக்கியத்தனம் வெளிச்சத்திற்கு வரும்வரை அவனை நல்லவன் என்று சொல்வது, இவர்களுடைய செயல்பாட்டில் வேறுபட்டு வெளியேறினால் அவன் மீது பாலியல் குற்றச்சாட்டு அல்லது பொருளாதார குற்றச்சாட்டு சுமத்துவது அதற்காக ஜமாத் மூலமாக பொருளாதார அல்லது கிரைண்டர், தையல் மெஷின் என்று கொடுத்து சாட்சிகளை செட்டப் செய்வது இதுதான் இவர்களின் கேடுகெட்ட நடைமுறை என்பதை இப்பொழுது மக்கள் நன்றாகவே தெரிந்துக் கொண்டு விட்டார்கள். நாங்கள்தான் உத்தமர்கள் என்று சொல்லிக்கொண்டு இவர்கள் செய்யும் இந்த கேடுகெட்ட செயலைப் பார்த்து மக்கள் இவர்களை காறித்துப்ப ஆரம்பித்து விட்டார்கள். இனியாவது அல்லாஹ்வையும், மறுமையையும் அஞ்சி இவர் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்.
Friday, 21 November 2014

பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் ...

அதிரையின் கடற்கரைத் தெருவில் நடைபெறவிருக்கும் கந்தூரி தொடர்பாக இன்று (21.11.2014) வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு, பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு, கடற்கரைத் தெரு கந்தூரிக் கமிட்டியினர் வந்திருந்தனர்.

அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக

1. அதிரை அஹ்மது (தலைவர்)
2. ஜமாலுத்தீன் புகாரீ (துணைத் தலைவர்)
3. ஜமீல் முஹம்மது ஸாலிஹ் (செயலாளர்)
4. அப்துர் ரஹ்மான் (துணைச் செயலாளர்)
5. நிஜாமுத்தீன் (பொருளாளர்)
6. அஹ்மது ஹாஜா (உறுப்பினர்)
7. கமாலுத்தீன் (உறுப்பினர்)

ஆகியோர் கலந்துகொண்டோம்.


கந்தூரி வழிபாடும் ஊர்வலமும் இஸ்லாத்துக்கு எதிரானவை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ததோடு, அவற்றில் எங்களுக்கு எவ்வித உடன்பாடும் இல்லை என்பதை, கூட்ட நடவடிக்கைக் குறிப்பில் எழுத வைத்தோம்.

வழக்கமாக அமர்வுக் கூட்டத்தை வழிநடத்திச் செல்லவேண்டிய கோட்டாட்சியரும் உள்ளூர் நடப்புகளை விவரிக்கக்கூடிய அதிரை நகரக் காவல்துறை ஆய்வாளரும் இல்லாமல் அமர்வு தொடங்கியது. மூன்று நாட்களுக்கு முன்னரே நமதூருக்குப் பதவியேற்று வந்திருக்கும் காவல்துறை உதவி ஆய்வாளருக்கு நமதூர் நிலவரங்களைப் பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. உருப்படியாக அழைப்பாணை தயாரித்து அனுப்பத் தெரியாமல் கந்தூரிக் கமிட்டியினரைப் பற்றியே குறிப்பிடாமல் அழைப்பாணை வந்தது. ஆவணமாகப் பதிவாகிவிட்ட அழைப்பாணையை மாற்றவேண்டும் என்றுகூடத் தெரியாதவராக வட்டாட்சியர் செயல்பட்டார். மாவட்ட ஆட்சியாளருக்கு நாம் அனுப்பிய வேண்டுகோள் மனுவைக்கூட அவர் படித்துப் பார்க்கவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

நகரக் காவல்துறை ஆய்வாளர் அனுப்பியிருந்த குறிப்புகளின் அடிப்படையில் கீழ்க்காணும் 4 நிபந்தனைகளைக் கந்தூரிக் கமிட்டியினர் ஏற்றுக்கொண்டு கையொப்பமிட்டனர்:

1. கந்தூரி ஊர்வலம் செல்லும் வழி: ஹாஜா நகர், ஈஸிஆர் ரோடு, தக்வாப் பள்ளி, கீழத் தெரு, (பாக்கியாத் பகுதி நீங்கலாக) மேலத் தெரு, பெரிய நெசவுக்காரத் தெரு, சிறிய நெசவுக்காரத் தெரு, மெயின் ரோடு, தரகர் தெரு, பள்ளிவாசல் தெரு வழியாக மட்டும் ஊர்வலம் செல்ல அனுமதி.

2. ஊர்வலத்தில் 6 வண்டிகள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறது.

3. ஊர்வலத்தை மாலை 4:30 முதல் இரவு 7:30 மணிக்குள் முடித்துக் கொள்ளவும்.

4. ஊர்வலம் புறப்படும் இடத்தில் மட்டும் குறைந்த அளவாக வாணவேடிக்கைகள் நடத்திக் கொள்ளலாம்.

மின்வாரிய விதிமுறைகள் மீறப்பட வேண்டாம்

அதிரை உதவி மின் பொறியாளர் அவர்களுக்கு 20.11.2014 தேதியிட்டு எழுதிய கடிதம்
_______________________________________________________________

கந்தூரிகளுக்குத் தடை வேண்டும்!

அஸ்ஸலாமு அலைக்கும்.


கந்தூரிகளுக்குத் தடை வேண்டி, மாவட்ட ஆட்சியருக்குக் கடந்த 17.11.2014 அன்று கூரியரிலும் மின்னஞ்சலிலும் அனுப்பிய வேண்டுகோள் மனு:
இன்று 21.11.2014 மாலை 3 மணிக்குப் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு-வார்த்தை நடைபெற உள்ளது.


Friday, 14 November 2014

இன்னுமா தயக்கம்?

(இன்று 14.11.2014 அதிரை ஜும்ஆப் பள்ளிகளில் வெளியிடப்பட்ட பிரசுரம்)

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்!
அல்லாஹ்வின் அடியார்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).


23.12.2012 பகல் 2.45 மணி!

அதிரையின் கடற்கரைத் தெருவில் அமைந்துள்ள தர்ஹா கபுருக்கு சந்தனம் பூசுவதற்காக  மூலஸ்தானத்துக்கு உள்ளே சென்ற பட்டத்து அலாவுத்தீன் இறப்பெய்து இரண்டாண்டுகள் ஓடிவிட்டன; இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் இறப்பில் நாம் பெறவேண்டிய படிப்பினைகள் அநேகம் உள்ளன.

ஆகக் கூடுதலாக 45 நிமிடத்தில் வழக்கமாக வெளியே வரவேண்டிய சர்க்கரை நோயாளியான அவர், ஏறத்தாழ மூன்றுமணி நேரம் (மாலை ஐந்தரை) வரை என்னவானார்? என்று கபுருக் கதவைத் திறந்து பார்க்காமல் வாயிலில் காத்துக் கிடந்தனர் பலர். ஓருயிர் பலியான பின்னும் இந்த அறிவீனத்தை விட்டொழிக்க இன்னுமா தயக்கம்?

அல்லாஹ் மனிதனுக்குப் பகுத்தறிவை வழங்கி, படைப்பினங்கள் அனைத்திலும் உயர்ந்த படைப்பாக ஆக்கியருளியிருக்க, அவனளித்த அருட்கொடையான அறிவை, என்றோ இறந்துபட்ட அவ்லியாவிடம் அடகு வைத்துவிட்டு, "அல்லாஹ்வுடைய மௌத்து" என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதை விட்டொழிக்க இன்னுமா தயக்கம்?

என்றோ மரணித்து, பதினொரு இடங்களில் அடங்கப்பட்டதாகக் கூறப்படும் ஹாஜா அலாவுத்தீன் ஜிஷ்தீ எனும் பெரியாரின் உடல் அதிரையின் கடற்கரைத் தெருவில்தான் உண்மையில் அடக்கப்பட்டது என்றே வைத்துக் கொண்டாலும், அந்தக் கபுருக்குமேல் கட்டடம் கட்டப்பட்டிருப்பதும் அந்தக் கபுருக்கு சந்தனம் பூசுவதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் வன்மையாகத் தடுக்கப்பட்டவை என்பதை ஏற்றுக்கொள்வதற்கு இன்னுமா தயக்கம்?

"சமாதிகளுக்காகக் கட்டடம் எழுப்புவதையும் சமாதிகளின் மீது பூசுவதையும் எழுதி வைப்பதையும் சமாதிகளின் மீது அமர்வதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை செய்தார்கள்"
ஜாபிர் (ரலி) : திர்மிதீ 972, அஹ்மது 14748.

அவ்லியாக்களின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, ஆண்டு தோறும் கந்தூரி என்ற பெயரால் விழாக்கள் எடுப்பதும் அதில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதும் எவ்வளவு பெரிய வழிகேடு என்பதைப் பல நபிமொழிகள் எச்சரிக்கின்றன. அல்லாஹ்வின் கோபமும் அல்லாஹ்வின் தூதரின் சாபமும் கந்தூரிக்கு நிச்சயமாக உண்டு என்பதை விளங்குவதற்கு இன்னுமா தயக்கம்?

"உங்கள் வீடுகளை(த் தொழுகையற்ற) கபுருஸ்தான்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; எனது சமாதியை (கந்தூரி) விழா நடக்கும் இடமாக்கி விடாதீர்கள்... என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எச்சரித்தார்கள்" அபூஹுரைரா (ரலி) : அஹ்மது 8449, அபூதாவூது 1746.

"... இறைவா, எனது சமாதியை வழிபடுமிடமாக ஆக்கி விடாதே... என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள்" அதா இப்னு யஸார் (ரலி) : அஹ்மது 7054, முஅத்தா மாலிக் 376 .                 `

"சமாதிகளைச் சந்திக்கச் செல்லும் பெண்களையும் சமாதிகளில் வழிபாடு செய்யும் பெண்களையும் சமாதிகளில் விளக்கேற்றும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் சபித்தார்கள்" இபுனு அப்பாஸ் (ரலி) : நஸயீ 2016, அபூதாவூது 2817, அஹ்மது 2952, இபுனுமாஜா 1564.

"நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக ஏற்படுத்திக் கொண்ட யூதர்களையும் கிருத்துவர்களையும் அல்லாஹ் சபித்து விட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் உறுதிபடக் கூறினார்கள். தம்முடைய சமாதியை அவ்வாறு ஆக்கிவிடுவதைப் பற்றி எச்சரித்தார்கள்"
அன்னை ஆயிஷா (ரலி) : புகாரீ 3195, 4087, 4089, 5368, முஸ்லிம் 826, அஹ்மது 23976, நஸயீ 696, 2020, முஅத்தா மாலிக் 1387.

கந்தூரியும் கப்ரு வழிபாடும் அல்லாஹ்வால் மன்னிக்க முடியாத பெரும் பாவம் என்பதை மக்களுக்குத் தெளிவாக, உறுதியாக எடுத்துச் சொல்லித் தடுக்க வேண்டியது நம் அனைவரின் மீதும் கடமையாகும். குறிப்பாக, மார்க்கம் அறிந்த ஆலிம்கள் என்போர் மீது கட்டாயக் கடமையாகும். ஏனெனில், மறுமையில் அவர்களுக்குக் கூடுதல் கேள்வியுண்டு. "கந்தூரி என்பது இஸ்லாமிய வழிபாடுகளுள் ஒன்று" என்று பிற மதத்தவர்  குறிப்பாக அரசு அதிகாரிகள்  தவறாக விளங்கி வைத்திருக்கின்றனர். அதனால்தான் இதில் தலையிடத் தயங்குகின்றனர். "கந்தூரி என்பது இஸ்லாமிய வழிபாடுகளுக்கு எதிரானது; தடை செய்யப்பட வேண்டிய ஒன்று" என்று அரசு அதிகாரிகளுக்குப் புரியும்படி வெளிப்படையாக, தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டியது மார்க்க அறிஞர்களின் பொறுப்பாகும். ஆலிம்களுக்கு இன்னுமா தயக்கம்?

கந்தூரி ஆதரவாளர்கள், 'பெரியாரின் பெயரால் கந்தூரி' எனும் மடமையிலிருந்து இனியாவது விடுதலை பெறவேண்டும்; அதற்கு வல்ல அல்லாஹ்வின் அருள் துணை நிற்க வேண்டும்.கடற்கரைத் தெரு மக்களின் சிந்தனைக்கு ...!

அதிரை கடற்கரைத் தெரு அமீரக அமைப்பு வெளியிட்டிருக்கும்
கந்தூரி எதிர்ப்பு அறிக்கைWednesday, 12 November 2014

நான்கு மடங்கு முஷ்ரிக்குகளான ததஜவினர்

அதிரை தாருத் தவ்ஹீத் vs ததஜ விவாதம் - 27.10.14 முதல் அமர்வு

கொள்கையற்றவர்கள் யார்?


அதிரை தாருத் தவ்ஹீத் vs ததஜ விவாதம் - 27.10.2014 முதல் அமர்வு - உரை-6 நேரம்: 13:00-13:30
இந்த அமர்வில், அல்லாஹ்வின் ஒரு பண்பு வேறு யாருக்கும் இருக்கிறது என்று நம்பினாலோ சொன்னாலோ அவர் முஷ்ரிக் என்றும் சூனியக்காரனுக்கு அல்லாஹ்வின் பண்பு இருப்பதாகக் கூறப்படும் ஸஹீஹான ஹதீஸை நம்புவதால்  அதிரை தாருத் தவ்ஹீத் ஷிர்க்கில் இருப்பதாகவும் ததஜ சார்பில் வலிந்துரை செய்யப்பட்டது.

அதற்கு பதிலாக, "தஜ்ஜாலின் வருகை பற்றிய ஹதீஸை ஸஹீஹ் என்று ததஜ நம்புகிறதா?" என்ற கேள்வி தாருத் தவ்ஹீத் சார்பாக பிற்பாடு வைக்கப்பட்டு, "ஆம், நம்புகிறோம்" என பதிலும் பெறப்பட்ட பின்னர்,

வானிலிருந்து மழையைப் பொழியச் செய்வது (78:14),
பூமியிலிருந்து தாவரங்களையும் தானியங்களையும் விளைவிப்பது (78:15),
 உயிர் கொடுப்பது; 
மரணிக்கச் செய்வது (3:156)

ஆகிய அல்லாஹ்வின் நான்கு பண்புகள் தஜ்ஜாலுக்கு இருக்கும் எனக் கூறப்படும் ஹதீஸ், மேற்காணும் அல் குர்ஆன் வசனங்களோடு நேரடியாக மோதுவதாக உள்ளது. குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸை ததஜ, 'ஸஹீஹ்' என்று நம்புகிறது.  மேலும், மேற்காணும் நான்கு செயல்களையும் எவ்விதப் 'புறச் சாதனமும்' இல்லாமல் தஜ்ஜால் செய்வான் என்று அறிவுக்குப் பொருந்தாதையும் ததஜ நம்புகிறது,

எனவே, ததஜவினர் நான்கு மடங்கு முஷ்ரிக்குகள் என சுய வாக்குமூலம் அளித்து, "கொள்கையற்ற ததஜ" என்பதை அவர்களே நிறுவியுள்ளனர்.

Monday, 10 November 2014

ஆடாமலே ஜெயித்த அப்பாஸி


அதிரை தாருத் தவ்ஹீத் vs ததஜ விவாதம் - 27.10.14 முதல் அமர்வு

கொள்கையற்றவர்கள் யார்?


அதிரை தாருத் தவ்ஹீத் vs ததஜ விவாதம் - 27.10.2014 முதல் அமர்வு - உரை-5 நேரம்: 12:30-13:00

ததஜ அதிரைக் கிளையின் இணைய தளம், மஞ்சள் பத்திரிகை போல் செய்திகளை வெளியிடுகிறது எனும் குற்றச்சாட்டுக்கு உவமையாக 'இந்துநேசன்' இதழைப் பற்றிக் குறிப்பிட்டதை, ததஜவின் மேலாண்மை எடுத்துக் கொடுத்து ததஜ மா.து.த. "கற்பனை" என்று உளறுகிறார். "நம்முடைய பிறப்புக்கு முன்னர் உலகமே இயங்கவில்லை" என்பது போன்ற மாயையில் உழல்பவர்கள், கூகுளில் "இந்துநேசன்" அல்லது "சினிமாதூது" அல்லது "லட்சுமிகாந்தன் கொலை வ்ழக்கு" என்று தேடிப்பார்த்து, அதிரை தாருத் தவ்ஹீத் சார்பில் கூறிய ததஜ அதிரை தளத்துக்கு இந்துநேசன் உவமானமும் குற்றச்ச்ட்டும் கற்பனையா உண்மையா எனத் தெரிந்து கொள்ளட்டும்.

"கடிதம் கொடுத்து ஃபேமஸ் ஆகப் பார்க்கிறார்கள்" என்ற ததஜ மா.து.த.வின் குற்றச்சாட்டுக்கு பதிலாக யார் மூலம் யார் ஃபேமஸ் ஆனார்கள் என்பதற்குக் கருப்பு வெள்ளை க்ளிப் போடப்பட்டது.

இதை எதுக்குப் போட்டாங்கன்னு விளங்கவில்லையாம். இவிங்கள்லாம் எதுக்கு விவாதம் செய்ய வரணும்?

சூனிய மாவு அரைக்க வந்த் நாசர், "84இல் ப்பீஜே சொன்னதை ஏற்றுக்கொண்டவர்கள் இப்போது அதே ப்பீஜே சொல்வதை ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன்?" என்ற அடிமுட்டாள்தனமான கேள்வியைக் கேட்கிறார்.


திருபுவனத்தில் நடந்த பயிற்சி முகாமிலும் அதற்குப் பிறகும் சூனியத்துக்கு விளக்கமாகக் குர்ஆன் வசனத்துக்கு ஸஹீஹான ஹதீஸை இணைத்துக் கூறியதால் ஏற்றுக்கொண்டோம்; இப்போது ஹதீஸ்களை மறுத்துத் தன் சுயவிளக்கத்தைக் கூறுவதால் ஏற்க மறுக்கிறோம் என்று விளக்கியும் புரிய முடியாமல் தவிக்கும் இவர்கள் விவாதம் செய்ய வந்ததேன்?

Thursday, 6 November 2014

திருந்துமா ததஜ? பகுதி - 6 (இறைவசனத்தை மறைக்கும் அப்துல் ரஹீம்)

لَقَالُواْ إِنَّمَا سُكِّرَتْ أَبْصَارُنَا بَلْ نَحْنُ قَوْمٌ مَّسْحُورُونَ 15:15  
எங்கள் பார்வைகள்தாம் மயக்கப்பட்டு விட்டன. இல்லையில்லை - நாங்கள் சூனியம் செய்யப்பட்ட கூட்டமாகிவிட்டோம் எனக் கூறுவார்கள். - அல் குர்ஆன் 15:15.
பார்வை மயக்கப்படுவது வேறு; சூனியம் என்பது வேறு எனப் பிரித்துக் காட்டும் "இல்லையில்லை بَلْ " எனும் அல்லாஹ்வின் சொல்லை வேண்டுமென்றே தவிர்க்கும் மோசடி வித்தையைப் புரிந்துகொள்ளுங்கள்!

வழிகேட்டிலிருந்து விலகிவிடுங்கள்!

அதிரை தாருத் தவ்ஹீத் vs ததஜ விவாதம் - 27.10.14 முதல் அமர்வு

கொள்கையற்றவர்கள் யார்?


அதிரை தாருத் தவ்ஹீத் vs ததஜ விவாதம் - 27.10.2014 முதல் அமர்வு - உரை-4 நேரம்: 12:00-12:30

இந்த  அமர்விலும் ஸிஹ்ரு எனும் சொல்லுக்கு:
1. பொய்
2. கண்கட்டி வித்தை
3. ஏமாற்று
ஆகிய மூன்று சொற்கள் ததஜவினரால் தமிழாக்கப்பட்டன.

"1984இல் சூனியத்தை எதிர்த்த நீங்கள், 2014இல் சூனியம் இல்லை என்று நாங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன்?" எனக் கூர் மழுங்கிய கேள்வியைத் ததஜவினர் முன்வைத்தனர்.

சூனியம் உண்டு என்று ஏற்றுக் கொண்டதற்கும் சூனியத்தை எதிர்த்ததற்கும் குர்ஆனும் ஸஹீஹ் ஹதீஸ்களும் அடிப்படையாக இருந்தன; இருக்கின்றன. சூனியம் என்பது இல்லை என்பதற்கு மூன்றாவதான மனிதக் கருத்துகள் மட்டுமே ஆதாரமாக வைக்கப்படுகின்றன. எனவே, குர்ஆன்  ஹதீஸுக்கு எதிரான மனிதக் கருத்தை மறுதலிக்கின்றோம்.

சூனியம் என்பது கண்கட்டி வித்தை இல்லை என்பதற்கு இறைவசனம் 15:15  தெளிவான சான்றாகத் திகழ்கிறது.

'சூனியம் என்பது வெறும் கண்கட்டி வித்தைதான்' எனும் தம் தலைவரின் கருத்தை நிலைநாட்டுவதற்காகத் தொண்டர்கள், இறைமறை வசனங்களையும் மறைப்பார்கள் என்பதற்கு இந்த அமர்வு தெளிவான சான்றாக அமைந்தது.

لَقَالُواْ إِنَّمَا سُكِّرَتْ أَبْصَارُنَا بَلْ نَحْنُ قَوْمٌ مَّسْحُورُونَ 15:15  
எங்கள் பார்வைகள்தாம் மயக்கப்பட்டு விட்டன. இல்லையில்லை - நாங்கள் சூனியம் செய்யப்பட்ட கூட்டமாகிவிட்டோம் எனக் கூறுவார்கள். 15:15.

பார்வை மயக்கப்படுவது வேறு; சூனியம் என்பது வேறு எனப் பிரித்துக் காட்டும் "இல்லையில்லை بَلْ " எனும் அல்லாஹ்வின் சொல்லை வேண்டுமென்றே தவிர்க்கும் வித்தையைப் புரிந்துகொள்ளுங்கள்!

வழிகேட்டிலிருந்து விலகிவிடுங்கள்!

Wednesday, 5 November 2014

திருந்துமா ததஜ? பகுதி-5 (பொய்யன் செய்யது இபுராஹீம்)

"ஒரு பைலாவைப் போட்டு வைத்துக் கொண்டு இதற்குள் இருப்பவர்களைத் தவிர மற்ற எல்லாரும் காஃபிர்கள்" என்று ஃபத்வாக் கொடுக்கக் கூடியவர்கள் அல்லர் நாங்கள்" என்று சொன்னதை,

எங்களுக்கு பைலாவே இல்லை என்று சொன்னதாகக் கூசாமல் நடுசபையில் புளுகும் பொய்யன் ததஜ செய்யது இபுராஹீம்:


அதிரை விவாதமும் அப்பாஸ் அலியின் மன மாற்றமும்

அல்லாஹ்வை அஞ்சி எடுத்த முடிவு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....

அன்பான சகோதரர்களே! சில ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை குா்ஆனுக்கு முரண்படுகின்றது என்று சகோதரர் பீஜே முதலில் கூறினார். அவர் கூறியது உண்மை என உளப்பூர்வமாக நம்பி நானும் அந்த ஹதீஸ்களை மறுத்து வந்தேன். இது தொடர்பாக ஹதீஸ்கள் குா்ஆனுக்கு முரண்படுமா? என்ற நுாலையும் நான் எழுதினே். தவ்ஹீத் ஜமாத்தில் மற்றவர்களை விட இது பற்றி நான் அதிகமாக பேசியும் எழுதியும் இருக்கிறேன்.

இந்நிலையில் முன்பு முரண்பாடாக தெரிந்த பல ஹதீஸ்கள் தற்போது அவற்றுக்கும் குா்ஆனுக்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை என்ற உண்மை எனக்கு தெரியவந்தது. குா்ஆனுக்கு முரண்படுகிறது என்ற வாதத்திற்கு பின்னால் தேவையற்ற சந்தேகங்களும் அறியாமையும் சம்பந்தமில்லாமல் வசனங்களை மோதவிடும் போக்கும் காஃபிர் இதை ஏற்றுக்கொள்வானா என்ற மனநிலை மட்டுமே மறைந்துள்ளது என்பதை உணர்ந்துகொண்டேன்.

குறிப்பாக நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஹதீஸ் குா்ஆனுடன் முரண்படவில்லை. அதை மறுப்பதற்கு எந்த நியாயமும் இல்லை. அது ஆதாரப்பூர்வமான நபிவழிதான். முஃதசிலாக்களையும் சகோதரர் பீஜேவையும் தவிர இஸ்லாமிய வரலாற்றில் யாரும் இந்த நபிமொழியை மறுக்கவில்லை. 2 102வது வசனத்தின் நேரடி பொருளை மாற்றி இஸ்லாமிய வரலாற்றில் இது வரை எவரும் கொடுக்காத சகோதரர் பீஜே கொடுத்த மாற்று விளக்கமும் குா்ஆனுக்கு மாற்றமாக உள்ளது.

இந்நிலையில் நான் சிஹ்ரை நம்பியவர்கள் முஷ்ரிக் என்று கூறினால் முதலில் நபி (ஸல்) அவர்களை நான் முஷ்ரிக் என்று கூறுவதாக அர்த்தம். (அவூதுமில்லாஹ்). அடுத்து சகோதரர் பீஜேவையும் இவ்விசயத்தில் அவருடைய கருத்தை ஏற்றுக்கொள்பவர்களைத் தவிர்த்து உலகில் உள்ள மற்ற முஸ்லிம்கள் அனைவரையும் முஷ்ரிக்குகள் என்று கூற வேண்டிய நிலை உள்ளது. முஃமின்களை முஷ்ரிக்குகள் என்று நான் கூறுவதை விட பெரிய வழிகேடு வேறு ஒன்றும் இருக்க முடியாது.

இந்நிலையில் இதுபற்றி நான் மக்களுக்கு தெளிவுபடுத்தாமல் மரணித்துவிட்டால் என்னுடைய மறுமைவாழ்வு கேள்விக்குறியாகிவிடும்? எனவே நான் வெட்கப்படாமல் எனக்கு சரி என்று படும் விசயத்தை பகிரங்கமாக அறிவிக்கிறேன்.

நான் சிஹ்ர் தொடர்பாக முன்பு தெரிவித்த கருத்துக்களுக்கும் ஹதீஸ்கள் குா்ஆனுக்கு முரண்படுமா? என்று எழுதிய நுாலுக்கும் இனி எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இது தொடர்பாக சில தினங்களுக்குப் பிறகு நான் எனது விளக்கத்தை இன்ஷா அல்லாஹ் வெளியிடுவேன்.

தவ்ஹீத் ஜமாத்தில் ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் நாளுக்கு நாள் நியாயமின்றி மறுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. மறுப்பதற்கு முன்பு மற்ற அறிகர்கள் யாரிடமும் ஆலோசனை செய்வதில்லை. மறுத்தப் பிறகு மற்றவர்களும் மறுத்தாக வேண்டிய நிலை வருகின்றது. மறுப்பதற்கு முன்பு மற்ற அனைவரிடமும் ஆலோசனை செய்யுங்கள் என்று நான் கோரிக்கை வைத்தப் பிறகும் அதை ஏற்காமல் சமீபத்தில் அதிராம்பட்டிணத்தில் நடந்த விவாவதத்தில் சில ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை அநியாயமாக சகட்டுமேனிக்கு மறுக்கப்பட்டது.


தவ்ஹீத் ஜமாத்தில் இருந்து கொண்டு இதை உரியவா்களிடத்தில் தெரிவிக்க என்னால் இயலவில்லை. எனவே வெளியில் இருந்து இதுபற்றி பேச முடிவு செய்துள்ளேன். இது திடீரென அவசர கோலத்தில் நான் எடுத்த முடிவில்லை. பல பிரச்சனைகளை சந்தித்து பலமாதங்கள் சென்ற பிறகு இதைத் தவிர வேறு வழியில்லை என்பதை அனுபவத்தில் உணர்ந்த அடிப்படையில் எடுத்த முடிவாகும். யாரையும் காயப்படுத்துவது என் நோக்கமல்ல. பொறுமையுடனும் சகோதர உணர்வோடும் இந்தப் பிரச்சனையை நோக்குமாறு அன்பாய் கேட்டுக்கொள்கிறேன்.

Tuesday, 4 November 2014

அதிரை தாருத் தவ்ஹீத் vs ததஜ விவாதம் - 27.10.14 முதல் அமர்வு

கொள்கையற்றவர்கள் யார்?

அதிரை தாருத் தவ்ஹீத் vs ததஜ விவாதம் - 27.10.2014 முதல் அமர்வு - உரை-3 நேரம்: 11:30-12:00

அதிரையில் அல்லாஹ்வின் அருளால் ஏகத்துவக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட வரலாற்றைக் கொச்சைப் படுத்திப் பேசும் செய்யது இபுராஹீம் என்பவர், முதலாம் அமர்வின் முதல் உரையில் ஒரு பைலாவை வைத்துக்கொண்டு, "இதற்குள் வராதவர்கள் காஃபிர்கள் என்று ஃபத்வாக் கொடுப்பவர்கள் நாங்கள் அல்லர்" என அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாகக் கூறப்பட்டதை, "அதிரை தாருத் தவ்ஹீதுக்கு பைலா கிடையாது எனப் பொய் சொன்னதாக" நாக்கூசாமல் நடுச் சபையில் புளுகுகின்றார். இவர்தான் ததஜவின் மாநிலத் துணைத் தலைவராம்.
எண்பதுகளில் ஐஎஸ்எம், தாருத் தவ்ஹீத் போன்ற அமைப்புகளால் தமிழகத்தில் ஏகத்துவப் புரட்சி ஏற்பட்டது என்று ததஜவின் மாநிலத் தலைவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் கருப்பு-வெள்ளை வீடியோ க்ளிப் போட்டுக் காட்டப்பட்டது.
இதுவரையிலும் கேட்கப்பட்ட இரு கேள்விகளுக்கு இதுவரை ததஜ பதில் தரவில்லை என்பதை அதிரை தாருத் தவ்ஹீதின் ஜமாலுத்தீன் பதிவு செய்துள்ளார்.

அதிரை தாருத் தவ்ஹீத் vs ததஜ விவாதம் - 27.10.2014

கொள்கையற்றவர்கள் யார்? 

அதிரை தாருத் தவ்ஹீத் vs ததஜ விவாதம் - 27.10.2014 முதல் அமர்வு - உரை-2 நேரம்: 11:00-11:30


ஸிஹ்ரு எனும் சொல்லுக்குக் கீழ்க்காணும் காணொளியில் மட்டும்
1. ஏமாற்று வித்தை
2. பொய்
3. போலித் தோற்றம்

ஆகிய 3 சொற்களைத் ததஜவினர் தர்ஜுமா செய்தார்கள். அடுத்தடுத்து வேறு பல சொற்களையும் சேர்த்துச் சொன்னார்கள்.


1984இல் சூனியத்தை எதிர்த்த தாருத் தவ்ஹீத் அமைப்பினர் 2014இல் ஏன் ஆதரிக்கின்றார்கள்? என்ற் கேள்வியைத் ததஜவினர் வைத்தனர்.


1984இல் குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எதிர்த்தோம்; இப்போதும் எதிர்க்கிறோம். குர்ஆன் ஹதீஸை விடுத்து, 2014வரை பலமுறை மாற்றப்பட்ட மூன்றாவது அடிப்படையான மனித அடிக்குறிப்புளைத்தான் ஏற்க மறுக்கிறோம். தனிமனிதக் கருத்துகளை ஏற்றுக்கொள்ளுமாறு மற்றவர்களை நிர்ப்பந்திக்க எவருக்கும் உரிமை இல்லை.
"ததஜ ஒப்புக்கொண்டால் சூனியத்தைப் பற்றித் தனியாக விவாதிக்கலாம்" எனக் கேட்டதற்கு பதில் சொல்லாமல் திரும்பத் திரும்ப சூனிய மாவையே ததஜவினர் அரைத்தனர்.

மார்க்க மஸாயில் ஒன்றில் இருவேறு கருத்து உள்ளவர்கள் ஒரு மேடையில் பேசக்கூடாது என்பதற்குக் குர்ஆன் - ஹதீஸ் ஆதாரம் என்ன? எனும் கேள்விக்குத் ததஜவிடம் பதிலே இல்லை.

Monday, 3 November 2014

அதிரை தாருத் தவ்ஹீத் vs ததஜ விவாதம் - 27.10.14 முதல் அமர்வு

கொள்கையற்றவர்கள் யார்?

அதிரை தாருத் தவ்ஹீத் vs ததஜ விவாதம் - 27.10.2014 முதல் அமர்வு - உரை-1 நேரம் : 10:30-11:00


சூனிய மாவு அரைக்க வந்த ததஜவினர், அதிரை தாருத் தவ்ஹீதின் மீது அவர்களாகக் கற்பனை செய்துகொண்ட பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர்.


சூனியக்காரர்களுக்கு எதிரான சவாலும் போராட்டமும் தங்களுக்கு முப்பது ஆண்டுப் பழையன என்பதை அதிரை தாருத் தவ்ஹீத் அணி நிரூபித்தது:
ஒரு பைலாவை வைத்துக்கொண்டு, "இதற்குள் வராதவர்கள் காஃபிர்கள் என்று ஃபத்வாக் கொடுப்பவர்கள் நாங்கள் அல்லர்" எனத் தெளிவு கொடுக்கப்பட்டது.

எவ்விதக் கூடுதல்-குறைவுமில்லாத ஒரிஜினல் பதிவு.

Sunday, 2 November 2014

திருந்துமா ததஜ? பகுதி-4

ததஜவின் பொய்யன் கலீல் ரஸூல் பேசும் விவாதப்(!) பொய்களை உங்கள் கண்களால் காணுங்கள்; செவிகளால் கேளுங்கள்:

தங்களைத் தவ்ஹீதுவாதிகள் எனச் சொல்லிக்கொள்வதற்கு ததஜவுக்குத் தகுதி இருக்கிறதா? "சூனியத்தை நம்பினால் நரகத்துக்குப் போவீர்கள்" என்று ரஸூலுல்லாஹ் (ஸல்) கூறினார்கள் என்று நாக்கூசாமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றியே இட்டுக் கட்டி அள்ளிவிடும் பொய்யனுக்கு சவால்!

அப்படி ஒரு ஹதீஸைக் காட்ட முடியுமா?

சகோதரர்களே! சிந்தியுங்கள்! பொய்யர்களிடமிருந்து தூரமாகுங்கள்! 

ததஜ பொய்யர்களுக்கு எச்சரிக்கை: "என் மீது இட்டுக்கட்டிச் சொல்லாதீர்கள். ஏனெனில், என் மீது எவன் இட்டுக்கட்டிச் சொல்வானோ அவன் நரகத்தில் நுழைவான்" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அலீ(ரலி) அறிவித்தார். - புகாரீ 106

Saturday, 1 November 2014

திருந்துமா ததஜ? - பகுதி-3


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காட்டித் தந்து, முஃமின்கள் பின்பற்றிய நேர்வழியைப் புறந்தள்ளிவிட்டு, புதியதொரு வழியைத் தேர்ந்துகொள்பவனை அவன் வழியிலேயே விட்டுவிடுவதாக அல்லாஹ் கூறுகிறான்:

وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءتْ مَصِيرًا  

4:115 எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்; அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்.


சகோ. அர்ஹம் அவர்கள் எடுத்துச் சொல்லும் மேற்காணும் இறை வசன விளக்கத்தை வழக்கம்போல் வெட்டித் திருகுதாளம் செய்து முகநூலில் பதிந்துவிட்டு, "வெற்றி", "வெற்றி" என்று ததஜவினர் பிதற்றுகின்றனர், இதோ அதன் முழுமையான காணொளி:

நேர்வழி சென்ற முஃமின்களுள் முதன்மையானவர்களான நபித்தோழர்களுக்கு மத்தியில் சிறு, சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தன என்பது எல்லாருக்கும் தெரிந்த உண்மை. அதைப் பிடித்துக்கொண்டு, நபித் தோழர்கள் அனைவரும் வழிகேட்டில் இருந்தனர் எனும் மாயையை உருவாக்குவதும் நபிவழியைப் பின்பற்றுவதற்காகத் தம் வாழ்க்கையை அர்ப்பணித்த மொத்த நபித் தோழர்களையும் சரியானவற்றில் பின்பற்றுவது ஷிர்க் என்றும் வழிகேடு என்றும் எதன் அடிப்படையில் கூறுகின்றீர்கள்? எனும் கேள்விக்கு, ததஜவிடம் பதிலில்லை.

இரு தரப்பினரும் விவாதித்தவை கொஞ்சமும் குறைக்கப்படாமல் மொத்தமாக இன்ஷா அல்லாஹ் இங்குப் பதிக்கப்படும்.

தொடரும், (இன்ஷா அல்லாஹ்).

திருந்துமா ததஜ? பகுதி-2

கடந்த நான்கு (27,28,29 & 30) நாட்களாக நடந்து முடிந்த விவாதத்தில் ததஜவின் கொள்கைக் குழப்பங்கள், எதிலும் நிலையற்ற தன்மை, சுய முரண்கள், அறிவுப் பூர்வமான கேள்விகளுக்கு உளறல்கள், பதில் தெரியாதபோது பெரும்பாலும் நாலாந்தர நடைப் பேச்சுகள் என வெளியாக்கி, தன் நிலையைத் தானே தாழ்த்திக் கொண்டனர் ததஜவினர்.

நான்கு நாள் விவாதத்தின் ஹைலைட் பகுதிகள் மட்டும் உங்கள் பார்வைக்கு:

விவாதத்தின்போது எதிரணியை வசை பாடுவதைக் கொள்கையாகக் கொண்டுள்ள ததஜவினர், மவ்லவீ சாபித் ஷரயியையும் தரக்குறைவான பல சொற்களால் அர்ச்சித்துத் தம் தரத்தை வெளிப்படுத்தினர்.

இன்ஷா அல்லாஹ் முழுமையான வீடியோ விரைவில் பதிவேற்றப்படும்.   

விவாதம் தொடர்புடைய புறச் சுட்டிகள் :  
1- http://adiraiaimuae.blogspot.in/2014/10/2-3.html    
2- http://adiraiaimuae.blogspot.in/2014/10/4.html