Thursday, 16 April 2015

காட்டுப்பள்ளி தர்கா கந்தூரி - அமைதிக் கூட்ட நிகழ்ச்சிக் குறிப்புகள்

அஸ்ஸலாமு அலைக்கும்.


பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கையெழுத்திட்டு அறிவிப்புக் கடிதம் ஒன்று (ந.க 200 / 2015 அ 3 - தேதி 11.4.2015) அதிரை தாருத் தவ்ஹீதின் அமீருக்கும் செயலருக்கும் கட்ந்த 14.4.2015 அன்று வழங்கப்பட்டது.
அதிராம்பட்டினத்தில் கந்தூரி என்றாலே கந்தூரி எதிர்ப்பாளர்களாக அரசு அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள தாருத் தவ்ஹீதுக்குக் கோட்டாட்சியரிடமிருந்து அழைப்பு வந்துவிடும். இம்முறை நான்கு அமைப்பினருக்கு அழைப்பு வந்தது.அமைதிக் கூட்டம் நடத்துவதற்கு முடிவு செய்த 15.4.2015 அன்று கடைசி நேரத்தில், கூட்டம் தள்ளிவைக்கப் படுவதாகத் தகவல் வந்தது. வழக்கம்போல் கந்தூரிக்கான எதிர்ப்பைத் தெரிவித்து, மாவட்ட ஆட்சியருக்கு 13.4.2015 நாளிட்டுக் கடிதம் எழுதியிருந்தோம்.

மறுநாள் 16.4.2015 காலையில் மறு அழைப்பு வந்து, பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். எங்களுக்கு முன்னதாக கந்தூரிக் கமிட்டியினர் அங்கு வந்து குழுமியிருந்தனர். எஸ்டிப்பிஐ அமைப்பினர் வரவில்லை. த.மு.மு.க.வினர் வந்திருந்தனர். இறுதியாகத் ததஜவினர் வந்து சேர்ந்த பின்னர் 12 மணியளவில் கூட்டம் தொடங்கியது.

தொடக்கமாக, கந்தூரிக் கமிட்டியினரோடு கூடவே வந்து அமர்ந்த முத்துப்பேட்டை தர்கா ட்ரஸ்டி பாக்கர் அலியை வெளியேற்றுமாறு அதிரை தாருத் தவ்ஹீதின் துணைத் தலைவர்  ஜமாலுத்தீன் கோரிக்கை வைத்தார். அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, கூட்டத்துக்கு அழைப்பு அனுப்பப்பட்டவர்களைத் தவிர மற்ற அனைவரையும் வெளியேறுமாறு கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.

ம்றைந்த கோல்டன் நிஜாமும் இதுபோல் ஒருமுறை வெளியேற்றப்பட்டது நினைவுக்கு வந்தது.

பின்னர் இரு தரப்பினரின் கருத்துகளையும் கோட்டாட்சியர் கேட்டார். கந்தூரியால் விளையும் தீமைகளையும் அனாச்சாரங்களையும் பட்டியலிட்டு மாவட்ட ஆட்சியருக்கு அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினர் எழுதிய கடிதத்தின் நகலைக் கோட்டாட்சியருக்கு வழங்கி, அக்கடிதத்தின் சாரத்தையும் செயலர் விளக்கினார். அத்துடன், காட்டுப்பள்ளி கந்தூரியை ஒரு காலத்தில் மேலத்தெருவினரும் கீழத்தெருவினரும் இணைந்து நடத்தியதில் இரு தெருவினருக்கும் கந்தூரியின்போது வெட்டு, குத்துகள் நடந்தேறி, யார் கந்தூரி நடத்துவது? என்ற் கேள்வியோடு நீதிமன்றம் வரை சென்று, தெருவுக்கு ஓர் ஆண்டு எனத் தீர்ப்பான பழைய வரலாறும் எடுத்துக் கூறப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 526ஆவது ஆண்டு கந்தூரி, இந்த ஆண்டு நோட்டீஸில் 756ஆம் ஆண்டு கந்தூரியான எப்படி என்றும் கேள்வி வைக்கப்பட்டது.

இந்த ஆண்டு கீழத்தெருவினருக்கான முறை வந்தும், கீழத்தெரு ஜமா அத்தினர் கந்தூரி எடுக்க மாட்டோம் என மறுப்புத் தெரிவித்து, கந்தூரித் தீமையிலிருந்து விலகிக் கொண்டுத் தீர்மானம் நிறைவேற்றியதும் கோட்டாட்சியருக்குச் சுட்டிக் காட்டப்பட்டது.

கடற்கரைத் தெருவில் கடந்த  நவம்பர் 2014இல் நடைபெற்ற கந்தூரியின் ஊர்வலம் மற்றும் கூடு சுற்றல் இரவின்போது நடந்தேறிய விதி மீறல்கள் அராஜகங்கள் பற்றி ததஜவின் அன்வர் அலீ விவரித்து, இஸ்லாத்துக்கு எதிரான கந்தூரியை எதிர்ப்பதற்கான காரணங்களை விளக்கினார். முத்துப்பேட்டை பாக்கர் அலி, அதிராம்பட்டினத்தாரின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, ஆதாயம் அடையப் பார்ப்பதாகவும் அதற்கான வீடியோ ஆதாரங்கள் தம்மிடம் இருப்பததாகவும் ததஜ அன்வர் அலீ கூறினார்.

கந்தூரிக் கமிட்டியினர், அவர்களின் தொன்மைப் பாட்டான, "காலங் காலமாக எடுத்து வரும் கந்தூரி" என்பதையே வளைந்து, நெளிந்து, குழைந்து பலமுறை சொல்லிக் கொண்டிருந்தனர். சலிப்படைந்த கோட்டாட்சியர், ஒரு கட்டத்தில், "இந்த விழா இஸ்லாத்தில் உள்ளதுதான் என்பதற்கு உங்களிடம் ஆதாரம் இல்லாதபோது, அதைவிட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொள்வதுதான் நல்லது" என்று அறிவுரை கூறினார்.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் கடந்த 9.5.2013 அமைதிக் கூட்டத்தைத் தலைமை ஏற்று நடத்திய வேறொரு கோட்டாட்சியர், "கந்தூரி விழா கொண்டாடுவதற்கு உங்க வேதத்திலிருந்து ஒரு சூரா ஆதாரம் சொல்லுங்க" என்று கேட்டதும் பதில் சொல்ல முடியாமல் அப்போதைய கந்தூரி கமிட்டியினர் தலைகுனிந்ததும் நினைவுக்கு வந்தது.

"நாங்கள் அமைதியாகக் கந்தூரி நடத்துவோம்" என்று கந்தூரிக் கமிட்டித் தலைவர் சேக் தாவூது கூறினார். அதற்கு மறுப்புத் தெரிவித்த த.மு.மு.க. அஹ்மது ஹாஜா, அமைதியாகக் கந்தூரி நடத்துவோம் என்ற உறுதி கொடுக்கப்பட்ட அதே காட்டுப்பள்ளி ஊர்வலத்தில், தான் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளானதையும் அவ்வழக்கில் பதியப்பட்ட முதல் தகவல் அறிககை 96&97/2012யின் கீழ் இன்னும் வழக்கு நடந்து வருவதாகவும் விவரித்து, ஊர்வலம் என்பதே உள்நோக்கத்தோடு (ஹிடன் அஜண்டாவாக) நடத்தப் படுவதுதான் உண்மை என்றார்.

இன்னும் பல்வேறு விளக்கங்களுக்குப் பின்னர், கீழ்க்காணும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு, எழுதிக் கையெழுத்துகள் பெறப்பட்டன:

இந்த அமர்வின் தீர்மானங்கள் பழைய தீர்மானங்களையும் உள்ளடக்கும் என்பதோடு ஊர்வலம் செல்லக்கூடிய பகுதிகளில் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பகுதியையும் இன்றைய தீர்மானத்தில் கூடுதலாக நான் சேர்த்திருக்கிறேன் என கோட்டாட்சியர் வலியுறுத்திக் குறிப்பிட்டார்.

உளத் தூய்மையுடன் எடுக்கப்படும் தீர்க்கமான நடவடிக்கைகளுக்கு வெற்றியைத் தருவதற்கு அல்லாஹ்வே போதுமானவன். அவனையே நாம் சார்ந்திருக்கிறோம்.

Monday, 2 February 2015

பெற்றோர்களின் கவனத்துக்கு ...

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!

கடந்த 10.1.2015 அன்று அதிரையில் ததஜ நடத்திய பொதுக்கூட்டத்தில், "இந்த ஊருக்குத் தவ்ஹீது வந்து 35 வருடங்கள் ஆகிவிட்ட பிறகும் பெண்களுக்கான மத்ரஸா இல்லாததால் ததஜ சார்பாக விரைவில் ஒரு பெண்கள் மத்ரஸாவை நாம் ஆரம்பிக்க இருக்கிறோம்" என்று ததஜவின் மாநிலச் செயலாளர்களுள் ஒருவரான அஷ்ரஃப்தீன் அறிவிப்புச் செய்தார்.
 

முஸ்லிம் மகளிருக்காக இன்னும் எத்தனை மத்ரஸாக்கள் நமதூருக்கு வந்தாலும் அவை வரவேற்கத் தக்கவையே. நாங்கள் மட்டுமே மார்க்கம் சொல்வதற்கும் போதிப்பதற்கும் ஒரே அத்தாரிட்டி என்று சிறுபிள்ளைத் தனமாகப் பிதற்றுவோர் நாங்கள் அல்லர்.
 

ததஜ பெண்கள் மத்ரஸா தொடங்குவதற்காக மகளிர் கல்வி மேம்பாடு அல்லது கல்விக் கூடங்கள் போதாமை போன்றவை காரணங்களாக வைக்கப்படாமல், அதிரை தாருத் தவ்ஹீத் நடத்தி வருகின்ற 'அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி'யில் தவ்ஹீதுக்கு எதிரானவை போதிக்கப்படுகின்றன என்ற அவதூறானக் குற்றச்சாட்டைக் காரணமாக அஷ்ரஃப்தீன் வைத்திருப்பதால் இந்தத் தன்னிலை விளக்க / விழிப்புணர்வுப் பதிவை நாங்கள் பதிய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டோம்.
 

தன்னிலை விளக்கம்:
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தில் தவ்ஹீது ஆலிமாக்களை உருவாக்குவதற்காகப் பயிற்றுவிக்கப்படும் காயல் 'அன்னை ஆயிஷா ஸித்தீக்கா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி'யின் பாடத் திட்டம்தான் 'அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி'யில் ஆலிமாக்களுக்காகப் பயிற்றுவிக்கப்படுகின்றது. அதிரை ததஜ ஆதரவாளர்கள் குடும்பத்தில் ஆலிமா பட்டம் பெற்றுள்ள மகளிர் பலரும் எமது கல்லூரியின் மாணவிகளே.
 

விழிப்புணர்வு:
"ததஜ சார்பாக விரைவில் ஒரு பெண்கள் மத்ரஸாவை நாம் ஆரம்பிக்க இருக்கிறோம்" என்று அஷ்ரஃப்தீன் அறிவிப்புச் செய்திருப்பதால் அவருடைய 'தகுதி'கள் 'முன் அனுபவங்கள்' குறித்து விசாரித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் பெற்றோர்கள் உள்ளனர். அவற்றுள் சில:


1.   அஷ்ரஃப்தீனைப் பற்றி குறிப்பிடும்போது, அவருடைய பெயருடன் 'ஃபிர்தவ்ஸி' என்று தவறாமல் ஒரு பட்டம் சேர்க்கப்படுகிறது. உண்மையிலேயே அவர் ஃபிர்தவ்ஸியாவில் பட்டம் பெற்றவரா? இல்லையெனில், ஃபிர்தவ்ஸியாவில் முழுமையாகப் பயின்று பட்டம் பெறாதவர்களின் பெயருக்குப் பின் 'ஃபிர்தவ்ஸி' என்று போடுவது கூடுமா?

2.    மதுரையிலிருந்து அதிரைக்கு வந்து தற்போது கத்தீபு தொழில் செய்துவரும் அஷ்ரஃப்தீன், இதற்கு முன்னர் பணியாற்றிய அல்ஃபுர்கான் பெண்கள் மத்ரஸாவிலிருந்து விலக்கப்பட்டவரா? எனில், என்ன காரணத்துக்காக விலக்கப்பட்டார்?

3.    தன்னோடு பணியாற்றிய ஆலிமா ஆஃபியா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) அவர்களின் விதவை அக்காவுக்கும் அஷ்ரஃப்தீனுக்கும் தொடர்பு ஏதும் இருந்ததுண்டா? எனில், அது என்ன விதமான தொடர்பு?

4.    ஆலிமா ஆஃபியா அக்கா விவகாரத்தால் அஷ்ரஃப்தீனின் குடும்பத்தில் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லையா?

5.    ஆலிமா ஆஃபியா அக்கா ஒரு கட்டத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா?

6.    உடல் நலமில்லாமல் அல்லது தற்கொலை முயற்சியில் தோல்வியுற்று மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆலிமா ஆஃபியா அக்காவுக்கு ஆறுதலாக இருந்து தலைக்கு எண்ணெய் தேய்த்து, தலைவாரி விட்டு, உணவூட்டி உதவி செய்த, திருமணமான ஆண் யார்?

7.    ஆலிமா ஆஃபியா அக்கா விவகாரம் பற்றி ததஜ தலைமை அஷ்ரஃப்தீனை விசாரணை செய்ததா?  அதை வீடியோ பதிவு செய்து கொண்டதா?

8.    அந்த விசாரணைப் பதிவு அஷ்ரஃப்தீனைப் பாராட்டுகிறதா? மிரட்டுகிறதா?

9. விசாரணையின் முடிவில் வழங்கப்பட்ட வரலாற்றுப் புகழ் மிக்க விசித்திரத் தீர்ப்பு என்ன?


போன்ற கேள்விகளுக்கான பதில்களை அஷ்ரஃப்தீன் தொடங்குவதாக அறிவித்துள்ள மத்ரஸா ஆரம்பிப்பதற்கு முன்னர் விசாரித்துத் தெரிந்து கொள்வது எல்லாருக்கும் - குறிப்பாக - பெண் மக்களின் பெற்றோருக்கு நன்மை பயக்கும்.

"ஒரு மூஃமின் ஒரே பொந்தில் தெரிந்துகொண்டே இருமுறை கொட்டுப்பட மாட்டான்" என்பது நபிமொழி.


இந்தப் பதிவு எங்கள் மீது கூடுதல் கடமையாக சுமத்தப்பட்ட விழிப்புணர்வுப் பதிவாகும். எங்கள் மீது கூடுதல் சுமைகளை சுமத்திவிடாதே! என்று அல்லாஹ்வை இறைஞ்சுகின்றோம்.

திருந்துமா ததஜ ஷைத்தான் இப்ராஹீம்?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.

கடந்த 10.1.2015 அன்று அதிரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ததஜவின் ஷைத்தான் இப்ராஹீம் "தாருத் தவ்ஹீத் என்பது தாருல் ஷிர்க்" என்று உளறிவிட்டுப் போயிருக்கிறான். மேடையும் மைக்கும் கிடைத்துவிட்டால் எதையாவது உளறுவதும் விமரிசனம் என்ற பெயரில் பிறரை வசைபாடி, தனிநபர் தாக்குதல் (கேரக்டர் அஸாஸினேஷன்) செய்வதும்  ததஜவினரின் வழக்கம். ததஜவின் து.த.வான இந்த நாறவாயன் பிறரை வசைபாடுவதில் ஸ்பெஷலிஸ்ட் என்பது ஊரறிந்த உண்மை.

ததஜவை, 'தக்லீது தறுதலை ஜமாத்' என்று எழுதுவதற்கும் பேசுவதற்கும் எங்களுக்குத் தெரியாதா? தெரியும்; ததஜ ஸ்டைலில் எங்களுக்குப் பேச வராதா? எழுதத் தெரியாதா? தெரியும். வேண்டாம் என்று நினைத்துத் தவிர்த்து வருகிறோம். பேச்சிலும் எழுத்திலும் கண்ணியம் காப்பது ததஜவுக்கு நலம் பயக்கும். அதை விடுத்து

எழுபதுகளின் இறுதியில் அல்லாஹ் முகிழவைத்த தாருத் தவ்ஹீதை இழிவு படுத்தும் முயற்சிகளை இனிமேலும் ஷைத்தான் இப்ராஹீமோ ததஜவின் இன்ன பிற குஞ்சுகளோ தொடர்ந்தால் இன்ஷா அல்லாஹ் நாங்கள் அவர்களைக் காட்டிலும் தீவிரமாக பதிலடி கொடுப்போம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். வலைத் தளம் வழியாக சீண்டிப் பார்த்து, 2014 அக்டோபர் விவாதத்தில் ததஜ பட்ட அவமானமும் அதிரை விவாதத்தைக் காரணம் காட்டி மவ்லவீ அப்பாஸ் அலீ ததஜவிலிருந்து வெளியேறியதும் மக்களுக்கு இன்னும் மறக்கவில்லை.

அதிரை தாருத் தவ்ஹீதோடு நடத்திய விவாதத்தின்போது தொங்கிய ததஜவினரின் தலைகளும் சுய ஒப்புதல் வாக்குமூலமும் படிப்பினை பெற்றுத் தரவில்லையா? ததஜ மீண்டும் அவமானங்களைத் தேடிக்கொள்ள வேண்டாம்.

இணையவெளி முழுக்கப் பரவிக் கிடக்கும் ததஜவுக்கு எதிரான பதிவுகளும் தகவல்களும் ததஜவினரின் திமிரெடுத்த பேச்சுகளின்/எழுத்துகளின் எதிர்வினைகள்தாம் என்பது எல்லாருக்கும் தெரியும். அவற்றுள் உள்குத்துகளும் வெளிக்குத்துகளும் விடைதேடும் கேள்விகளும் மலிந்து கிடக்கின்றன. அவற்றைக் கூடுதல் வெளிச்சம் போட்டுக் காட்டுவது நமக்கு விருப்பமானதல்ல. நமக்கு விருப்பமில்லாதவற்றுள் நம்மை ததஜ குஞ்சுகள் தள்ளினால் பின்விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பாளிகளாவர்.

"இன்னும் கெட்டுப் போவோம்; என்ன பந்தயம்?" எனக் கேட்கும் கூட்டம்

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்!


இஸ்லாம் என்றால் என்னவென்றே தெரியாமல், மவ்லிது பாட்டுகளை மட்டும் பாடி 'முஸ்லிம்'களாக வாழ்ந்து கொண்டிருந்த எத்தனையோ கிராமங்கள் திருந்தி மவ்லிதை ஒழித்துக் க்ட்டிவிட்டன.


ஆனால், ஆலிம்கள் 'பெருத்த' ஊரான அதிராம்பட்டினத்தின் 'நடு' செண்ட்டரில் உள்ள நடுத்தெருவின் செக்கடிப்பள்ளியில் என்றும் இல்லாத புது வழக்கமாக இன்று 2.2.2015 காலையில் மவ்லிதுக் கச்சேரி துவங்கப்பட்டுள்ளது.


கல்யாண வீட்டில் மாப்பிள்ளையாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை; இழவு வீட்டில் பிணமாக இருக்க வாய்ப்பிருந்தால் போதும் என்று முண்டிக்கொண்டு முன்வருகின்றவர்கள் ஊரின் பிரபலங்களாக உருவாகிவிட்டதாலும் தங்கள் வயிறு நிறைந்தால் போதும்; கச்சேரியில் கொஞ்ச நேரம் கத்திவிட்டு, வாய்க்குக் கிடைப்பதை வாரிச் சுருட்டலாம் என்ற ஒரே நிய்யத்தில் வாழ்க்கையை ஓட்டுகின்ற 'ஆலிம் சாக்கள்' இன்னும் திருந்தாததாலும் மவ்லிது கச்சேரி மீண்டும் தலையெடுத்து ஆடுகிறது.


இந்த ஆட்டம் தானாக நிற்குமா? யாரேனும் முன்வந்து தடுத்து நிறுத்த வேண்டுமா?


مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ
"உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும்; முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்); அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இதுவே உறுதியற்ற இறைநம்பிக்கையின் இறுதிநிலையாகும் என்று என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்"

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி). முஸ்லிம் 70

Saturday, 3 January 2015

அதிரை ததஜவின் வேண்டுகோள்

இன்ஷா அல்லாஹ் நாளை 4.1.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணியளவில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் சூனியம் சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்பதற்கு வேண்டுகோள் விடுத்து அதிரை ததஜவினர் எங்களுக்குக் கீழ்க்காணும் கடிதம் ஒன்றைத் தந்தனர்:
அதிரை ததஜவினருக்கு எங்களின் பதில் மடல்: