கொரோனாவாம், உள்ளாட்சித் தேர்தலாம்!
ஆனால் கந்தூரி ஊர்வலத்துக்கு அனுமதியாம்!
பெறுநர் :
முனைவர். வெ. பழனிகுமார் IAS அவர்கள்,
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர்,
208/2, ஜவஹர்லால் நேரு சாலை, அரும்பாக்கம்.
சென்னை – 600106.
Email: tnsec.tn@nic.in,
நகல்கள்:
1. மாவட்ட ஆட்சியர் அவர்கள், தஞ்சாவூர்
collrtnj@nic.in, collrtnj@tn.nic.in,
2. மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள்,
3. இணை கண்காணிப்பாளர் அவர்கள், பட்டுக்கோட்டை.
4. ஆய்வாளர் அவர்கள், அதிராம்பட்டினம்.
பொருள்: கொரொனா பேரிடர் மற்றும் தேர்தல் நடத்தை விதிகளை மீறி நடத்தபடும் கலவர ஊர்வலம் மற்றும் கந்தூரி அநாச்சாரங்களைத் தடை செய்ய வேண்டி
ஐயா, வாழ்த்துக்கள்,
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் அதிராம்பட்டினம் என்ற எங்களது ஊரில் இஸ்லாம் மார்க்கத்திற்கு சிறிதும் சம்பந்தமில்லாத முஸ்லிம்களை சீண்டும் வகையில் அருவருக்கத்தக்க வாசகங்களோடும் ஆபாச நடனங்களோடும் நடைபெறும் ஊர்வலமே கந்தூரி ஊர்வலம். இதனால் கலவரங்கள் அடிக்கடி ஏற்பட்டு, கொலைமுயற்சி வழக்கு, லைப்ரரி கொட்டகையை எரித்த வழக்கு, கோஷ்டி வழக்குகள் உள்பட பல வழக்குகள் உண்டு. தொடர் பதட்டத்தை முன்னிட்டு எங்கள் ஊரில் காவல் ஆய்வாளர்களாக இருந்த திரு.செங்கமலக்கண்ணன் மற்றும் திரு.ரவிச்சந்திரன் ஆகியோரின் அறிக்கையை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி வட்டாட்சியரின் தலைமையில் அமைதிக்கூட்டம் ஏற்படுத்தப்பட்டு ஊர்வலம் மற்றும் 13 நாள் கந்தூரி நிகழ்வுகளுக்கு நெறிமுறை வகுக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கும், பல நிபந்தைகளுக்கும் கந்தூரி கமிட்டியினர் ஒப்புக்கொண்ட பின்பே அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. 2020 கொரொனா பேரிடருக்குப் பின் எந்த மத ஊர்வலத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் அமைதி பேச்சு வார்த்தைக்கு அவசியம் இன்றி இருந்தது.
நிபந்தனைகளுடன் நடைபெறும்போதே கலவரத்தை ஏற்படுத்தும் இவ்வூர்வலமானது இன்றைய தினம் எங்கள் ஊரில் எந்த விதக் கட்டுப்பாடுகளும் வட்டாட்சியரால் விதிக்கப்படாமல் நடைபெற உள்ளது. கொரொனா பேரிடர் ஊரடங்கு தளர்வுகளில் அனைத்து மத வழிபாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதே தவிர திருவிழாக்களுக்கும் மத ஊர்வலத்திற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை என்பதாலும் தேர்தல் நடத்தை விதி அமுலுக்கு வந்துவிட்டதால், அனைத்து பொதுக்கூட்டங்களும் மற்றும் ஊர்வலங்களும் தேர்தல் நிகழ்வாகவே கருதப்படும் என விதிகளில் சொல்லியிருப்பதோடு கொரொனா பரவலை முன்னிட்டு வாகன பேரணிகள், பாதயாத்திரைகள், ரோடு ஷோக்கள், மற்றும் ஊர்வலங்களுக்குத் தலைமை தேர்தல் கமிஷன் தடை விதித்திருப்பதாலும் இன்றைய (2.2.2022) ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது. எனவே ஐயா அவர்கள் சட்ட விரோத இவ்வூர்வலத்திற்குத் தடை விதிப்பதோடு, திருவிழாக்கள் எனும் பெயரில் நடைபெறும் ஒலிபெருக்கி, ஆடல் பாடல் கச்சேரி, சூது போன்ற நிகழ்வுகளையும் தடை செய்யவேண்டும். குறிப்பாக நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்றைய (1.2.2022) தினமே பள்ளிகள் திறந்திருப்பதால் அதிகமான பாடத் திட்டங்களை மாணவ மானவிகள் பயில இருப்பதால் காலை நேரங்களில் அலரவிடப்படும் ஒலிபெருக்கிக்கு அனுமதி மறுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.
இப்படிக்கு,
கந்தூரி உண்டு; ஊர்வலம் இல்லை!
ReplyDelete