Saturday, 21 October 2017

கடற்கரைத் தெரு கந்தூரி - சட்டம் ஒழுங்கு பிரச்சினை - மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம்


16.10.2017
உயர்திரு ஆ. அண்ணாத்துரை IAS, அவர்கள் (Professional Couriers TNJ 3326442)
மாவட்ட ஆட்சியர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தஞ்சாவூர் – 613 001
தொலைபேசி : 04362-230102 தொலைநகல் : 04362-230206, மின்னஞ்சல் : collrtnj@nic.in
பொருள்: அதிராம்பட்டினத்தில் கந்தூரியை ஒட்டி சட்டம் ஒழுங்குப் பிரச்சினை
மரியாதைக்குரிய ஐயா,
கந்தூரிகளுக்கும் கந்தூரி ஊர்வலங்களுக்கும் நாங்கள் தொடர்ந்து தடை கோருவதற்கு, அவற்றில் நடக்கும் மார்க்க விரோத செயல்கள் மட்டுமின்றி சமூக விரோதச் செயல்களின் ஊற்றுக் கண்ணாகக் கந்தூரி விழாக்கள் விளங்குவதாலும் அவற்றைத் தடை செய்யவேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றோம்.
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு தர்ஹாவில் எதிர்வரும் 21.10.2017இல் தொடங்கி, 30.10.2017 வரை கந்தூரி நடைபெறவுள்ளது.
இதே கடற்கரைத் தெரு கந்தூரியின்போது, கடந்த 23.12.2012 மாலையில் தர்காவிலுள்ள சமாதிக்கு சந்தனம் பூசுவதற்கு உள்ளே சென்ற பட்டத்து அலாவுத்தீன் என்பவர் ஆக்ஸிஜன் கிடைக்காமல் இறந்தார். கந்தூரி எனும் மடமையினால் ஓர் உயிர் பலியானதைப் பற்றி நான்காண்டுகளாகப் பல மடல்களில் தெரிவித்திருக்கிறோம்
ஐந்தாண்டுகளுக்கு முன்னர், கடந்த 2012 ஆண்டின் காட்டுப்பள்ளிக் கந்தூரி ஊர்வலத்தின்போது நடுத்தெரு தக்வாப் பள்ளியில் மாலைத் தொழுகைக்குப் பின்னர் நடைபெற்ற கலவரத்தின்போது திட்டமிட்ட கொலை முயற்சியொன்று அதிராம்பட்டினம் காவல்துறையில் முதல் தகவல் அறிக்கையாகப் பதிவு செய்யப்பட்டு (FIR 96&97/2012) வழக்கு நடைபெற்று வருகிறது.
கந்தூரியும் ஊர்வலமும் முஸ்லிம்களின் சமயமான இஸ்லாத்திற்கு எதிரானவை” எனும் சான்றாதாரங்களின் அடிப்படையில் தகுந்த காரணங்களை விளக்கி, வன்முறைகளும் ஆபாசங்களும் அரங்கேறும் கந்தூரிகளைத் தடை செய்ய வேண்டும் எனும் கோரிக்கை மனு ஒன்றைக் கடந்த 4.5.2013 நாளிட்டு, தஞ்சை மாவட்ட ஆட்சியர் உயர்திரு கே. பாஸ்கரன், ஐ.ஏ.எஸ் அவர்கள் தொடங்கி இதுவரைக்கும் அனுப்பிக்கொண்டிருக்கின்றோம்.
எங்களுடைய கோரிக்கையைத் தக்கவாறு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பீர்கள் என்றே இதுவரை எதிர்பார்த்திருக்கின்றோம்.
கடந்த (30.4.2014)இல் நடைபெற்ற காட்டுப்பள்ளி தர்கா கந்தூரியின்போது, கந்தூரிக்குத் தீவிர எதிர்ப்பாளர்களான மேலத்தெரு பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் மசூதியைச் சுற்றி வாழ்பவர்கள் கந்தூரி ஊர்வலம் அந்தப் பகுதிக்கு வரக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து, அந்தப் பகுதியும் அதுபோன்ற இன்னும் சில பகுதிகளும் Sensitive Areas என்பதை அதிராம்பட்டினம் நகரக் காவல்துறை ஆய்வாளர் அவர்களின் ஆய்வுக்குப் பின்னர் கோட்டாட்சியர் அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு, தீர்மானத்தில் பதிவு செய்யப்பட்டது (29.4.2014 கோட்டாட்சியர் அலுவலகத் தீர்மானம் எண் 6).
சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளோடு கந்தூரிகளைத் தடை செய்யவேண்டும் என்ற எங்களின் கோரிக்கைக்கான நியாயமான, சமயம் மற்றும் சமூகம் சார்ந்த காரணங்கள்:
  • இறந்துபோன மகான்களின் பெயரால் கந்தூரி விழாக் கொண்டாட்டம் என்பது இஸ்லாமிய சமயத்துக்கு எதிரானது.
  • கந்தூரிகளில் நடைபெறும் பாட்டு, கூத்து, கச்சேரிகள், சூதாட்டம் ஆகியன இஸ்லாமிய சமய விழுமியங்களுக்கு எதிரானவை.
  • முறையற்ற தொடர்பு/உறவு மற்றும் கள்ளக் காதல் ஆகியன உருவாவதற்குக் கருவறையாகக் கந்தூரி விழாக்கள் பயன்படுகின்றன.
  • பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் கந்தூரிக் கமிட்டியினரால் வசூல் செய்யப்படும் பணம், இஸ்லாத்துக்கு எதிரான செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுவதோடு இரவில் வாண வேடிக்கை எனும் பெயரால் முதியோர், நோயாளிகள், குழந்தைகள் ஆகியோருக்குத் தொல்லை தருகிறது.
  • கந்தூரி ஊர்வலத்தின்போது சமூக விரோதச் செயல்களான போதைப் பயன்பாடு, ஆபாசப் பேச்சுகள், கலவரங்கள், கல்லெறிதல், பெண்களைக் கேலி செய்தல் நடைபெறுகின்றன.
  • கந்தூரி ஊர்வலம் தொடங்கும் மாலை 4 மணி முதல் இரவு பத்து மணிவரை விதிகளுக்குப் புறம்பான மின் தடையால் பொதுமக்களின் நிம்மதி கெடுகின்றது.
மேற்காணும் தொல்லைகளையும் சமூகப் பாதிப்புகளையும் உண்டாக்குகின்ற கந்தூரியைத் தாங்கள் தயவு கூர்ந்து தடை செய்வதற்கு ஆவண செய்ய வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கின்றோம்.
அமைதிக் கூட்டம் அனைத்திலும் நாங்கள் எங்களுடைய நிலைப்பாட்டைத் தெளிவாகவும் உறுதியாகவும் தெரிவித்து வருகின்றோம். இந்த மூன்று அம்சங்களும் அமைதிக் கூட்ட நடவடிக்கைகளின் தொகுப்பில் எங்கள் சார்பாக இடம்பெறல் வேண்டும்.:
  1. இஸ்லாத்துக்கும் கந்தூரிக் கொண்டாட்டங்களுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை.
  2. எனவே, கந்தூரிக்கும் எங்களுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை.
  3. சட்டம் ஒழுங்குப் பிரச்சினை என்பது எங்களால் இதுவரை ஏற்பட்டதில்லை. இனியும் ஏற்படாது.
நன்றி!

                                                                                                                 Jameel M. Salih (signed)
                                                                                                        செயலர் (9043727525)
நகல்கள்:
  1. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள், தஞ்சாவூர்
    Tel : 04362-277220; Fax : 04362-271553 spthanjavur@yahoo.com
    (Professional Couriers TNJ 3326443)
  2. வருவாய் கோட்டாட்சியர் அவர்கள், பட்டுக்கோட்டை
     (Professional Couriers TNJ 3326444)
  3. நகர காவல்துறை ஆய்வாளர் அவர்கள், அதிராம்பட்டினம்.

No comments:

Post a Comment