Friday 31 October 2014

திருந்துமா ததஜ? - பகுதி-1

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்!


அல்லாஹ்வின் பேரருளால் அதிரை தாருத் தவ்ஹீதின் செயல்பாடுகள் கடந்த ஈராண்டுகளாகத் தீவிரமடைந்தன.

  • பிலால் நகரில் 'இஸ்லாமியப் பயிற்சி மையம்', 
  • கடற்கரைத் தெருவில் 'அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி', 
  • கடைத் தெருவில் 'இஸ்லாமிய நூலகம்', 
  • ஏ. எல். ஸ்கூலில் கோடைக்காலப் பயிற்சி முகாம், 
  • ஈபீஎம் ஸ்கூலில் ரமளான் சிறப்பு நிகழ்ச்சிகள்
  • விழிப்புணர்வுப் பிரசுரங்கள்
  • கந்தூரி எதிர்ப்பு நடவடிக்கைகள்

ஆகியன மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றன, அல்ஹம்து லில்லாஹ்!

அதிரை தாருத் தவ்ஹீதின் இஸ்லாமியப் பிரச்சாரங்களைத் ததஜவினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. காழ்ப்பைக் கொட்டத் தொடங்கினர். அவர்களுடைய தளத்தில் நாலந்தர நடையில் தாருத் தவ்ஹீதை, "கொள்கையற்றவர்கள்" எனத் தாக்கத் தொடங்கினர்.


அதன் விளைவாக அதிரை தாருத் தவ்ஹீதின் செயலாளரால் கடந்த 16.7.2014 இரவில் "கொள்கையற்றவர்கள் யார்?" எனும் விவாத அறைகூவல் விடுக்கப்பட்டது.
பத்து நாளாகியும் ததஜவிலிருந்து எவரும் வரவில்லை. எனவே, அறைகூவலை 26.7.2014 அன்று கடிதமாக்கிக் கொடுக்கப்பட்டது:
அறைகூவல் விடுக்கப்பட்டு, கடிதமாகத் தரப்பட்டு, அதற்கான ததஜவின் முதல் பதில் 18.8.2014 அன்று இரவு பெறப்பட்டது. அதையடுத்து இரு தரப்பிலும் இரு கடிதங்கள் பரிமாறப்பட்டு, க்டந்த 11.9.2014இல் விவாத உடன்படிக்கை கையெழுத்தானது:


விவாதத் தலைப்பு : "கொள்கையற்றோர் யார்?"
நாள்கள் : 27,28,29 & 30 அக்டோபர் 2014
இடம் : பவித்ரா திருமண மண்டபம், அதிராம்பட்டினம்.


- தொடரும் (இன்ஷா அல்லாஹ்)

No comments:

Post a Comment